உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒகேனக்கல் காவிரியில் 70,000 கனஅடி நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரியில் 70,000 கனஅடி நீர்வரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து இரு நாட்களுக்கு முன், 75,500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், கபினியில் இருந்து நேற்று, 40,292 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையில், 15,000 கன அடி என, 55,292 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் மாலை, 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 63,000 கன அடி; மாலை, 5:00 மணிக்கு, 68,000 கன அடி, மாலை 6:00 மணிக்கு, 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் குடியிருப்புகளை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால் தர்மபுரி கலெக்டர் சாந்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். ஐந்தாவது நாளாக நேற்றும் காவிரியாற்றில், குளிக்க, பரிசல் இயக்க தடை தொடர்ந்தது. போலீசார், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கரையோர பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 21, 2024 06:45

அப்படியே இதை சிந்தாமல், சிதறாமல் கடலில் கொண்டு போய் சேர்க்க தமிழக அதிகாரிகள் பாடுபடணும்.


mindum vasantham
ஜூலை 21, 2024 05:59

ஆடி பெருக்கன்று மேட்டூர் நிறையும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை