உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்னி பஸ்களில் 80 சதவீத முன்பதிவு

ஆம்னி பஸ்களில் 80 சதவீத முன்பதிவு

லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆம்னி பஸ்களில், 80 சதவீத முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளது.இதுகுறித்து, தமிழக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் கூறியதாவது:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும், 19ல் நடக்க உள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்று ஓட்டுப்போட, மக்கள் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், சென்னையில் இருந்து இயக்கப்படும், 2,100 ஆம்னி பஸ்கள், பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும், 1,150 ஆம்னி பஸ்களில் முன்பதிவு நடக்கிறது. இதில் ஏப்., 17ல், 70 சதவீதம், 18ல், 80 சதவீத முன்பதிவு முடிந்துள்ளது. அதேபோல், 20, 21ல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு முன்பதிவு, 70 சதவீதம் முடிந்துள்ளது. சில நாட்களில், 100 சதவீத முன்பதிவு முடிவுக்கு வரும். அதற்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை