உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிங்கப்பூரில் இருந்து முதல் முறையாக சென்னைக்கு வந்த பிரமாண்ட கப்பல்

சிங்கப்பூரில் இருந்து முதல் முறையாக சென்னைக்கு வந்த பிரமாண்ட கப்பல்

சென்னை, வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றும் பெரிய சரக்குக் கப்பல்கள், சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்வது உண்டு.அந்த வகையில், சிங்கப்பூரில் இருந்து முதல் முறையாக, மிகப்பெரிய சரக்குக் கப்பல், கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு, சென்னை துறைமுகம் வந்துள்ளது. 'ஏ.பி.எல்., பாஸ்டன்' என்ற அந்த சரக்கு கப்பல், 1.09 லட்சம் டன் எடையும், 328.2 மீட்டர் நீளமும், 14.9 மீட்டர் ஆழமும் உடையது. மேலும், இந்தக் கப்பலில் 9,326 டன் எடையுள்ள சரக்குகள், கன்டெய்னர் வாயிலாக கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கு முன், 2017 ஜன., 1ம் தேதி 14.8 மீட்டர் ஆழம் உடைய பெரிய சரக்குக் கப்பல் கையாளப்பட்டது. இதை விட அதிக ஆழம் உடையதாக, தற்போதைய சரக்குக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.இதற்காக, சென்னை துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், சரக்குமுனைய ஆப்பரேட்டர்கள், கப்பல் ஏஜன்ட் ஆகியோருக்கு, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை