உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக வரி வருவாயில் புதிய உச்சம் மூன்றாண்டுகளில் 47 சதவீத வளர்ச்சி

வணிக வரி வருவாயில் புதிய உச்சம் மூன்றாண்டுகளில் 47 சதவீத வளர்ச்சி

சென்னை:தமிழக அரசின் வணிக வரித்துறையில், கடந்த மூன்று ஆண்டுகளில், வரி வருவாய் 40,399.51 கோடி ரூபாய் அதிகம் ஈட்டப்பட்டு, 47.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.தமிழக அரசு செய்திக்குறிப்பு:வரி நிர்வாகத்தில், பல்வேறு எளிய நடைமுறைகள், மின்னாளுமை திட்டத்தில் வலைதளங்கள் மூலமாக வரிகளை செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவை செயல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, முந்தைய ஆட்சியில், 85,606.41 கோடி ரூபாயாக இருந்த, மொத்த வரி வசூல் வருவாய், 2023 - 24ம் ஆண்டில், 1.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், 40,399.51 கோடி ரூபாய் வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டு, 47.19 சதவீதம் வரி வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளது.வணிக வரித்துறை சார்பில், 62 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. புதிதாக, 39.29 கோடி ரூபாயில், 12 வணிக வரி கட்டடங்கள்; 19 கோடி ரூபாயில், 100 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில், துறையின் நுண்ணறிவு பிரிவு ஆய்வு குழுக்கள் வழியாக, 1,096 கோடி ரூபாய், சுற்றும் படைகள் வாயிலாக, 217.68 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது.வணிக வரி மாவட்டங்களின் எண்ணிக்கை, 42ல் இருந்து, 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வரித்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் வழியாக, இனி வரும் காலங்களில், அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை