உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: கமல்

ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛தி.மு.க., அரசு செய்து காட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை, அதன் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அறுவடை செய்திருக்கிறது' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்காக சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப் போகும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க, மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.தி.மு.க., தலைவராக, 2019 லோக்சபா தேர்தல் துவங்கி, தான் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் முதல்வர் ஸ்டாலின் வெற்றியை குவித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்; பாராட்டுகள்.சிந்தாமல், சிதறாமல் சந்தேகம் இல்லாமல், தி.மு.க., கூட்டணி பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை. இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S.Ambigapathi
ஜூன் 05, 2024 08:47

ஆண்டவர் நிலை


S.Ambigapathi
ஜூன் 05, 2024 08:43

Sappanikku velai vanthuruchi


Kalaiselvan Periasamy
ஜூன் 05, 2024 06:33

இவர் ஒரு அவமானச் சின்னம் இவரின் சமூகத்திற்கு. நடத்தை கெட்ட இவரையும் போற்றும் மாக்களை என்ன வென்று சொல்வது என்றே தெரியவில்லை. தமிழ் நாடு என்றுமே இருண்ட நாடு தானோ ?


sankar
ஜூன் 05, 2024 06:27

அடேய் தம்பி - நடந்தது பாராளுமன்ற தேர்தல் - விவரம் இல்லாமல் உளறுவதே வேலை - இந்த அளவுக்கு சொம்பு அடிப்பதா


Rajarajan
ஜூன் 05, 2024 05:56

ஒன்பது லட்சம் கோடி கடன், விபத்து ஏற்படுத்தும் பேருந்துகள், போதை கலாச்சாரம், இதனால் வன்முறைகள், டாஸ்மாக் மூலம் இளம் விதவைகள், குடும்ப அரசியல், லஞ்சம் / ஊழல், கனிமவள கடத்தல், மத்திய அரசிடம் வாய்திறந்து பொதுமக்களுக்கு உணவு சமைக்க மண்ணெண்ணெய் உரிமை கூட கேட்காத M.P. க்கள், இலவசத்தால் கூடுதல் கடன் சுமை. இவ்வளவு இருந்தும், நீங்க உங்க விசுவாசத்தை கைவிடலை ஆண்டவரே. அங்க தான் நீங்க நிக்கறீங்க. விடுங்க, விடுங்க, அதான் ஏற்கனவே உங்க மாநிலங்கள் அவை தொகுதி உறுப்பினர் நேரடி பதவி தான் உறுதி ஆகிடுச்சே. இருந்தாலும் நீங்களும், தமிழக மக்களின் பலவீனத்தை சரியா புரிஞ்சிக்கிட்டிங்க பாருங்க, அங்க நிக்கறீங்க. இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியல.


k
ஜூன் 05, 2024 04:46

எல்லாம் ஒரு ராஜ்ய சபா சீட் போட்ட பிச்சை


இந்தியன்
ஜூன் 05, 2024 04:45

நியாயஸ்தன் சந்துரு என்ன ஆனான்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ