| ADDED : ஜூலை 07, 2024 02:01 AM
சென்னை:மருத்துவ நோயறிதல் நிறுவனமான ஆர்த்தி ஸ்கேன்ஸ் அண்டு லேப்ஸ், 'வைட்டல் எம்.ஆர்.ஐ.,' என்று அழைக்கப்படும், முழு உடல் பரிசோதனை பிரிவை துவக்கிஉள்ளது. இந்த பரிசோதனையை செய்ய, 24,000 ரூபாய் கட்டணம். இந்த பரிசோதனையின் முக்கிய நோக்கமே, எதிர்வரும் உடல் நல பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதே. அதாவது, புற்றுநோய் அறிகுறிகள், முதுகெலும்பு சிதைவு, மூட்டு வீக்கம், மூளை, வயிறு மற்றும் மார்பில் உள்ள பிரச்னைகள் உள்ளிட்டவற்றை, இந்த பரிசோதனையின் வாயிலாக கண்டறியலாம்.அத்துடன், மூளையின் அளவு பகுப்பாய்வு, கல்லீரல் கொழுப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை மதிப்பிடுதல் உள்ளிட்ட தனித்துவமான சோதனைகளும் உள்ளன. இந்த முழு உடல் பரிசோதனையை, சென்னை, புதுடில்லி, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் கிளைகளில் செய்து கொள்ளலாம்.