உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமுல் தயிரை கண்டு நடுங்கும் ஆவின்: குடோனில் இறக்கி விற்க நெருக்கடி

அமுல் தயிரை கண்டு நடுங்கும் ஆவின்: குடோனில் இறக்கி விற்க நெருக்கடி

சென்னை:அமுல் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டுகளை, குடோனில் இறக்கி விற்பனை செய்வதற்கு, ஆவின் வாயிலாக மறைமுக நெருக்கடி தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் ஆவின் வாயிலாக நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்கப்பட்டது. இது தற்போது, 26 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதனால், பால் பொருட்கள் உற்பத்தி முடங்கியுள்ளதால், ஆவின் நிறுவனம் நாள்தோறும், 1 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.ஆவினுக்கு போட்டியாக குஜராத் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான அமுல் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம், ஆந்திர மாநிலம், சித்துாரில், பால் பண்ணையை நிறுவியுள்ளது. அங்கு தயாரிக்கப்படும் பால், தயிர், பனீர் ஆகியவற்றை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்க திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் பால் விற்பனையை அனுமதிக்கக் கூடாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். கடும் எதிர்ப்பு காரணமாக, பால் விற்பனையை அமுல் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது. ஆனால், தயிர் மற்றும் பனீர் விற்பனையில் இறங்கியுள்ளது. இதற்காக, செங்குன்றம் அருகே அலமாதியில், அமுல் நிறுவனத்திற்கு குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்த விற்பனையாளர்களும், 1 லட்சம் ரூபாய் வரை டிபாசிட் கட்டணம் செலுத்தி, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.குடோனில் தயிர் மற்றும் பனீரை இறக்கி விற்பனை செய்வதற்கு, ஆவின் அதிகாரிகள் மறைமுக நெருக்கடி கொடுப்பதால், பூந்தமல்லியில், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி, அவற்றில் இருந்து தயிர் மற்றும் பனீர், மொத்த விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிலைக்கு, அமுல் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

RAMANATHAN MUTHIAH
ஜூன் 14, 2024 02:05

ஆவின் கொல்முதலை குறைத்து, 500 ml பாக்கெட்டில் 475 மேல் கொடுப்பது, 4.5 சத கொழுப்பு என்று போட்டு 3 சதம் கொடுப்பது என்று fraud வேலை செய்வதை நிறுத்தினால் நன்றாக இயங்கும். அதை விடுத்து அடுத்தவனை வராதே என்று சொல்வது சட்டத்திற்கு புறம்பானது.


பாலா
ஜூன் 12, 2024 19:04

சோழிங்கநல்லூர் பால் பண்ணை விற்பனை நிலையத்தில் 2 மாசத்துல காலாவதி ஆகப்போற பாக்கெட்டை வெச்சு வித்துட்டு இருக்காங்க 1 கிலோ பாக்கெட் 10 மாசம் முன்னாடி தயாரிச்சது புதுசு கேட்டா இது தான் இருக்குன்னு பதில் வருது


பாலா
ஜூன் 12, 2024 18:56

நீங்க என்ன தான் சத்தம் போட்டு கூவுனாலும் 2026 அவிங்க தான் நம்ப சனத்துன்னு மறதி நோவு கொஞ்சம் சாஸ்தி ஊவா வாங்கிட்டு அங்கிட்டு குத்திடுவாங்கல்ல ✔?


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 12, 2024 18:36

ஆட்சியின் லட்சணம் இதுதான்


ram
ஜூன் 12, 2024 13:47

ஆவின் அலுவலகத்தில் மாத கார்டு வழங்குபவர்கள் இரண்டுக்கு மேல் கார்டு வைத்துஇருப்பவர்களிடம் எதற்கு உங்களுக்கு இரண்டு/மூன்று கார்டுகள், இதை ஒன்றாக குறைத்து கொள்ளுங்கள் என்று கூறிவருகிறார்கள். இவர்களால் பால் வழங்க முடியவில்லை என்றால் அமுல் உள்ளே விடலாம். ஆவினை இழுத்து மூடி விடலாம்.


Ramesh Sargam
ஜூன் 12, 2024 11:52

ஆவின் பொருட்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்காமல், மத்திய உள்துறை அமைச்சருக்கு எதற்கு கடிதம் எழுதவேண்டும்? ஆவின் பொருட்களின் தரம் உயர்த்தப்பட்டால், மக்கள் அதைத்தான் வாங்குவார்கள். ஆவின் பொருட்களின் தரம் சரியில்லாததால்தான், மக்கள் அமுல் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள்.


Bhaskaran
ஜூன் 12, 2024 09:17

ஆவின் அதிகாரிகள் அமுல் நிறுவனத்திடம் கையூட்டு வாங்கி கொண்டு விரைவில் ஆவினுக்கு காரியங்களை செயவார்கள்


Sureshkumar
ஜூன் 12, 2024 15:11

ஆவின் பால் நிறுவனத்தின் தரத்தை மேம்படுத்தாத தமிழக அரசு அடுத்த மாநில அரசின் பால் நிறுவனத்தின் தரமான பொருட்களை விற்பனையை நிறுத்தும் தமிழக அரசு , ஏன் அவர்கள் அளவுக்கு தரமான பொருட்களை அளிக்க முயற்ச்சி செய்வத்தை விட்டு விட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத வெக்க படவேண்டும், 40 தொகுதியில் லஞ்ச பனத்தில் காசு கொடுத்து வெற்றி பெற தெரியும், ஆனால் ஆவின் தரத்தை உயர்த்த தெரியாது, வெட்க்கேடு. விடியா திமுக ஒழிக.


S MURALIDARAN
ஜூன் 12, 2024 07:52

ஒட்டு வங்கிகாக விலையை குறைத்து அதை சமாளிக்க முடியாமல் திணறும் அரசு, தனியார் பால் உற்பத்தியாளர்கள் முன் வரும்போது அதை எதிர்ப்பது என்ன நியாயம் ?


Dharmaraj
ஜூன் 12, 2024 07:13

நண்பர்களே....உங்களுக்கு எல்லாம் கார்பரேட் தான....வேண்டும். அரசு நடத்தும்...எதுவும் முன்னேற கூடாது..


பாலா
ஜூன் 12, 2024 19:08

அரசு தரமா நடத்தினா ஏன் மக்கள் வாங்காம போக போறாங்க சென்னையில இருந்தீங்கன்னா சோழிங்கநல்லூர் ஆவின் விற்பனை நிலையத்துக்கு போய் பாருங்க.


Samuel
ஜூன் 12, 2024 07:05

ஆவின் நல்ல ஒரு தரம் கொடுக்கும் நிறுவனம் ஆவின் கொடுக்கும் தரம் அமுல் நிறுவனத்தால் கொடுக்க முடியாது நம் சுதேசியாக இருக்க வேண்டும் சுதேசி என்றால் நம் தமிழ் நாடு தயாரிப்பை நாம் வாங்க வேண்டும்


Vasudevan
ஜூன் 12, 2024 08:05

ஆவின் கொடுக்கும் தரம்?? நல்ல ஜோக். அமுல் கூட சுதேசி தான். Imported கிடையாது.


N Maheswaran
ஜூன் 12, 2024 09:31

அமுல் தரத்தில் ஆவினைவிட சிறந்தது. விலை குறைவு. தனியார் பால் தயிர் விற்கலாம். ஆனால் கூட்டுறவு இயக்கமான அமுல் கூடாதா? ஆவினில் அரசு அடிக்கும் கொள்ளைக்கு நாம் பலியாக வேண்டுமா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை