மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை:நெடுஞ்சாலை துறையை, 14 ஆண்டுகளுக்கு பின், மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.தமிழக நெடுஞ்சாலை துறை 1946ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. துறைக்கு தனி செயலர் பதவி 1996ல் ஏற்படுத்தப்பட்டது.அதன்பின், இத்துறையின் கீழ் சிறு துறைமுகங்கள் துறையும் உருவாக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை வாயிலாக, 73,187 கி.மீ., சாலைகள், 1.39 லட்சம் மேம்பாலங்கள், சிறுபாலங்கள், சுரங்க நடைபாதைகள் உள்ளிட்டவைபராமரிக்கப்படுகின்றன.கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திட்டங்கள், பெருநகரம், நபார்டு மற்றும் ஊரக சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், திட்டம், நெடுஞ்சாலை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. செயலர், முதன்மை இயக்குனர், தலைமை பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்களின் கீழ் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2010ம் ஆண்டுதி.மு.க., ஆட்சியில், நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்பின், 14 ஆண்டு கள் கழித்து, தற்போது துறையை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைதுவங்கியுள்ளது.அதன்படி புதிய பிரிவுகள், கோட்டங்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்ட பின், இதுகுறித்த அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொறியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் போது, அதற்கேற்ப அலுவலர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago