உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலை திருட்டு மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்

சிலை திருட்டு மீது நடவடிக்கை இல்லையேல் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை:

கடந்த ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி., இருந்த பொன் மாணிக்கவேல் நடவடிக்கையால், கடத்தப்பட்ட பல கடவுள் சிலைகள் மீட்கப்பட்டன. அந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளன.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. மேலும், முறைகேடாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கும் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் நெருக்கமாகினர். பின், வழக்கு என்னவாயிருக்கும் என்பது குறித்து சொல்ல வேண்டியதில்லை.போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட வேண்டிய தமிழகத்தின் சிலைகள், 2,000க்கும் மேல் உள்ளன என கூறி வருகிறார். ஆனால், அதை மீட்க ஹிந்து அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதுவரை காணாமல் போன திருக்கோவில் சிலைகள் எவ்வளவு, அதற்காக சிலை தடுப்புப் பிரிவு போட்டுள்ள வழக்குகள் எத்தனை?மேலும் காணாமல் போன, பல ஆயிரம் கோடி மதிப்பிலான மரகத லிங்கம் போன்றவை குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கோவில் சிலை களவு போவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன?சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை காணாமல் போன வழக்கில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் வேட்டை தொடருவதாகச் சொல்லி விசாரணையை இழுத்தடித்தனர். இதேபோலத்தான் மற்ற வழக்குகளின் நிலையும்.எனவே இதுவரை சிலை திருட்டு மற்றும் கடத்தல் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தி.மு.க., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு மவுனம் சாதித்தால், பக்தர்கள் ஆதரவோடு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பாமரன்
ஜூன் 02, 2024 12:56

இந்த நபர் சுட்ட போராட்ட வடைகள் நூறுக்கும் மேலிருக்கும்...?


Kasimani Baskaran
ஜூன் 02, 2024 13:53

திராவிட போராட்டம் மாதிரியெல்லாம் கிடையாது


Kasimani Baskaran
ஜூன் 02, 2024 12:20

உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை அமைப்புக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது - ஆனால் தங்கள் வரம்பை மீறி அவர்கள் இதை செய்யக்கூடாது, இதை செய்யவேண்டும் என்று உருட்டுகிறார்கள். இதை ஜனாதிபதி உச்சநீதிமன்றத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.


GMM
ஜூன் 02, 2024 09:14

நீதிமன்றத்தில் உள்ள சிலை திருட்டு வழக்கை விரைவில் எப்படி முடிக்க முடியும். எந்த வழக்கையும் ஆள் பார்த்து, ஆழம் பார்த்து தான் வழக்கறிஞர்கள் முடிப்பார்கள். நீதி, நெறி பார்க்க முடியாத மாநிலம். கோவில் வழிபாடு சில மணி நேரம். முழு நேர இந்து அறநிலைய துறை எதற்கு? மத்திய பாதுகாப்பு படை உதவி நாடும் ஒரே உயர் நீதிமன்றம் தமிழகத்தில் உள்ளது. முதலில் மத்திய அரசினால், மாநிலத்தை நிர்வகிக்க முடிய வேண்டும். மாநிலம், உள்ளாட்சி அமைப்புகளை கட்டுப்படுத்துகிறது.


GMM
ஜூன் 02, 2024 08:04

மன்மோகன் சிங்கை இயக்கியது சோனியா என்று நாடு அறியும். அண்ணா காலம் முதல் திமுக சில தீயசக்திகளால் இயக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்செழியன் கீழ் தள்ளி கருணாநிதி நியமனத்தில் தீயசக்தி பங்கு உண்டு. கருணா நன்கு வளைய கூடியவர். ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், பஞ்சாப் நிர்வாகத்தில் ஊடுருவி விட்டன. கெஜ்ரிவால் சிறை முதல்வராக பணியாற்ற முடிவது, மம்தா, திமுக மத்திய அமைப்புகளை தடுப்பதின் பின்புலம் உண்டு. தமிழகத்தில் வலுவான கவர்னர். வலுவற்ற தேர்தல் ஆணையர், DGP, தலைமை செயலாளர். சிலை மீட்பு ஸ்டாலினால் முடியாது. பின் நிற்கும் தீய சக்திகள் / அந்நிய சக்திகள் காண வேண்டும். அகற்ற வேண்டும். எதிர் கட்சி வலுவற்ற மாநிலம். தற்போது போராட்டம் பலன் தராது.


Kasimani Baskaran
ஜூன் 02, 2024 07:46

இந்து அறநிலையத்துறையால் கோயில்களை தொடர்ந்து நிர்வகிக்க அதிகாரம் கிடையாது. நிர்வாகத்துக்குள் வரவேண்டும் என்றால் அவர்கள் ஏற்கனவே இருக்கும் அறங்காவலர் குழு முறைகேடு செய்தது என்று கோர்ட் ஆணை மூலம் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் மட்டுமே நிர்வாகத்தை சரி செய்ய அவர்கள் நிர்வாகத்துக்குள் நுழையலாம். குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் நிர்வாகத்தை சரி செய்து அறங்காவலர்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறிவிட வேண்டும். இம்மியளவும் கோவில் சொத்துக்களை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமிக்க முடியாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை