உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை நடக்கிறது ஏரோ மாடலிங் பயிற்சி: தினமலர் மற்றும் -சிட்டியின் புது முயற்சி

நாளை நடக்கிறது ஏரோ மாடலிங் பயிற்சி: தினமலர் மற்றும் -சிட்டியின் புது முயற்சி

சென்னை : 'ஏரோ மாடலிங் சயின்ஸ்' மீது ஆர்வமுள்ள குழந்தையா நீங்கள்? உங்களுக்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழும், 'சிட்டி' அறிவியல் பயிற்சி மையமும் இணைந்து, நாளை அதற்கான பயிற்சி வகுப்பை நடத்துகின்றன.கோடை விடுமுறையில் வீட்டில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு, அறிவியல் பாடத்தின் மீது ஆர்வத்தை துாண்டும் வகையில், 'தினமலர்' நாளிதழும், 'சிட்டி' அறிவியல் பயிற்சி மையமும் இணைந்து, 'ஏரோ மாடலிங்' பயிற்சி வகுப்பை, நாளை காலை 10:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை, 'ஆன்லைன்' வழியாக நடத்துகின்றன. 'ஏரோ மாடலிங் சயின்ஸ்' மீது ஆர்வமுள்ள, 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுடன், பெற்றோரும் பங்கேற்கலாம். இந்த பயிற்சி வகுப்பில், ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பதிவு செய்யாத மாணவர்கள், இந்த செய்தியில் உள்ள கியூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்து, பதிவு செய்ய வேண்டும்.

வேண்டியவை

ஏ4 மற்றும் வண்ணதாள்கள் - 6 சிறிய கத்தரிக்கோல் அரையடி ஸ்கேல் க்ளூ பென்சில் மார்க்கர் பேப்பர் கிளிப் - 2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ