உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அம்மி, ஆட்டு உரல் வைத்து மாவு அரைத்து ஆர்ப்பாட்டம்

அம்மி, ஆட்டு உரல் வைத்து மாவு அரைத்து ஆர்ப்பாட்டம்

சென்னை : தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதைக் கண்டித்தும், ரேஷனில் பருப்பு, பாமாயில் வினியோகத்தை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில், நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் கட்டண உயர்வால்,பழைய காலத்திற்கு திரும்பும் நிலை உள்ளதைக் காட்டும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், கைகளில் அரிக்கேன் விளக்கு மற்றும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்திருந்தனர். சென்னை தண்டையார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெரும் திரளாக கலந்து கொண்ட அ.தி.மு.க., மகளிர் அணியினர், அம்மி, ஆட்டு உரல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து, அங்கேயே வைத்து அரிசி குத்தல், மசாலா மற்றும் மாவு அரைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:நிர்வாகத் திறமை இல்லாத அரசு, மின் கட்டண சுமையை ஏற்றியதுடன், ரேஷனில் பருப்பு, பாமாயில் வழங்காமல் அல்லல்படுத்துகிறது. ஆனால், தமிழகத்தில் தங்குதடையின்றி போதைப்பொருட்கள் மட்டும் கிடைக்கிறது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறுவதோடு, ரேஷன் கடைகளில், பருப்பு, பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kumar
ஜூலை 24, 2024 18:41

தவறான யோசனையை கேட்டு மக்களவை தேர்தலில் பாஜா கா வுடன் கூட்டணியை தவிர்த்து தி மு கவிற்கு நாற்பது தொகுதிகளையும் தாரை வார்த்து திமுகவிற்கு உதவி செய்த , சிறுபான்மையினர் வாக்குக்காக காலம் காலமாக நெறியில் இருந்த திருநீரை அழித்து கொண்டு திரிந்த இடப்பாடி அவர்களின் போராடும் நாடகம்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2024 11:52

நீங்க கண்கெட்ட பிறகு சூரியனை காணும் வேளையில் ஈடுபட்டுளீர்கள்


Sampath Kumar
ஜூலை 24, 2024 11:48

அண்ணா திமுக ஆட்டுக்களு அம்மிக்கல்லு வங்கி பெண்களுக்கு கொடுத்தால் நல்ல உதவியாய் இருக்கும் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் செய்வார்களா ???/


சந்திரசேகர்
ஜூலை 24, 2024 09:54

மின்சார சாதனங்கள் வந்த காரணத்தினால் பெண்களின் வீட்டு வேலைகள் சுலபமாகி விட்டது. அதனால் உடல் நல பிரச்சனை அதிகமாகி விட்டது. சுகர் பீபீ மற்றும் உடல் பருமன். ஆக இந்த பிரச்சினையிலிருந்து விடுபடவும். மின்சார கட்டணத்தை மிச்சபடுத்தி பணம் சேமிக்கவும். சுற்று சூழல் மாசுபாட்டை குறைக்கவும் இலவச திட்டங்களுக்கு வேண்டிய பணத்தை திரட்டவும் மின்சார கட்டணத்தை ஏற்றி உள்ளோம். மன்னிக்கவும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை