உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியலின சமுதாயம் பா.ம.க.,வுக்கு ஆதரவளித்தால் தலித் தான் முதல்வர் அடித்து சொல்கிறார் அன்புமணி

பட்டியலின சமுதாயம் பா.ம.க.,வுக்கு ஆதரவளித்தால் தலித் தான் முதல்வர் அடித்து சொல்கிறார் அன்புமணி

மரக்காணம் : “தமிழகத்தில் பட்டியலின சமுதாயம் பா.ம.க.,விற்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை முதல்வர் ஆக்குவோம்,” என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். கூட்டத்தில், கீழ்சிவிரி அடுத்த பிரம்மதேசத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும். கீழ்சிவிரி கிராமத்தை திண்டிவனம் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின் அன்புமணி அளித்த பேட்டி: இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து, 78 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் உண்மையான சுதந்திரம்.தமிழகத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். மதுவால் வரும் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தும் நிலை உள்ளது.தமிழகத்தில் இன்றைய சூழலில் மூன்று தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகம் முழுதும் விற்பனையாகின்றன. இவற்றை கட்டுப்படுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோதே தெரிவித்தேன். மூன்று ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை இல்லை. மதுக்கடைகளை மூடுவதற்கு ஒரு திட்டம் கொண்டுவர வேண்டும். தேர்தல் அரசியலை மட்டும் பார்த்து அரசியல் செய்யக்கூடாது. 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.தமிழகத்தில் பட்டியலின சமுதாயம் பா.ம.க.,விற்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை முதல்வர் ஆக்குவோம். அந்த சமூகத்தைச் சேர்ந்தவரை, 1998ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பா.ம.க., தான்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raghavan
ஆக 16, 2024 20:50

நீங்களும் உங்க அப்பா காணும் கணுவுகள் பலிப்பதற்கு கண்டிப்பாக வாய்ப்பு இல்லை. நீங்கள் படித்த படிப்பை வைத்துக்கொண்டு உங்களால் ஆனாத ஏழைகளுக்கு செய்யுங்கள். கனவு மெய்ப்பட வாய்ப்பே இல்லை.


S.Aruna
ஆக 16, 2024 14:06

முதலில் அனைத்துக்கோவில்களிலும் அனைத்து சாதியினரும் வழிபட அனுமதிக்கட்டும் பின்னர் முதல்வர் நாற்கலிபற்றி பேசலாம்.


M Ramachandran
ஆக 16, 2024 13:31

அப்போ ஆலய குத்து எட்டு எல்லாம் என்னாச்சி வன்னியர் ........ மாற்றாருக்கு இல்லை என்ற கோக்ஷம் என்னாயிற்று


MADHAVAN
ஆக 16, 2024 11:27

பச்சோந்திமணிக்கு என்ன ஆச்சு ? பீ சப்பி கட்சி கழட்டி விட்டுருச்சா ?


Sampath Kumar
ஆக 16, 2024 08:27

மாம்பழத்தை அதுவா பழுக்கும் என்று ஏதிர் பார்த்து ஏமாந்து பொய் இப்போ கல்லு போட்டு பழுக்க வைக்கலாமா என்று நூல் விட்டு பார்க்கிறாரோ


sankar
ஆக 16, 2024 07:48

தேவை இல்லாத வேலை


Mani . V
ஆக 16, 2024 06:04

இவ்வளவு காலமும் எங்கள் குடும்ப உறுப்பினர்களை முதல்வர் ஆக்கவில்லை என்று கூவியது பொய்யா? அல்லது விசிக ஏமாற்ற இந்தப் பொய்யா?


krishnamurthy
ஆக 16, 2024 09:49

நம்ப முடிய இல்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை