| ADDED : ஜூலை 03, 2024 01:53 AM
சென்னை:தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றுபவர்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. அடுத்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், இந்த ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது உட்பட 72 விருதுகளுக்கும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.www.tamilvalar chithurai.tn.gov.in/awards, http://awards.tn.gov.in என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஆகஸ்ட், 15க்குள், தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனர் அலுவலகம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.