உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்பு வாரியத்தால் முடங்கிய சொத்துக்கள்; திருச்சி போல திருப்பூருக்கும் தேவை தீர்வு

வக்பு வாரியத்தால் முடங்கிய சொத்துக்கள்; திருச்சி போல திருப்பூருக்கும் தேவை தீர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'திருச்சி மாவட்டத்தில், வக்பு வாரிய நில விவகாரத்துக்கு தீர்வு காணப்பட்டது போல, திருப்பூர் மாவட்டத்திலும் தீர்வு காண கலெக்டர் முன்வர வேண்டும்' என, பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில், சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மசூதிகளுக்கு சொந்தமான சொத்து மற்றும் நிலம் தொடர்பான பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது. அதன் மீது எவ்வித பதிவும் மேற்கொள்ள வேண்டாமென பரிந்துரைக்கப்பட்டிருந்தது.மசூதிக்கு சொந்தமான சொத்து விபரம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு புல எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வரும் பிரிவுகளை குறிப்பிடவில்லை. மசூதி சொத்தின் மீது விதிக்கப்பட்ட தடையால், ஒரே புல எண்ணில் வரும் தனியார் சொத்துக்கள் முடக்கப்பட்டன.திருப்பூர் தெற்கு தாலுகா, மங்கலம் கிராமம்; அவிநாசி, உடுமலை, தாராபுரம் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் முறையிட்டனர். 'மசூதிக்கு சொந்தமான சொத்துக்கு மட்டும் தடை விதிக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக கிராமத்துக்கே தடை விதிக்கக்கூடாது; இதை, சரிசெய்து கொள்ள வேண்டும்' என, கலெக்டர், வக்பு வாரியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.மக்கள் கூறியதாவது: அரசு வழங்கிய பட்டா இருந்தும், பதிவுத்துறை வாயிலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கிய பட்டாவை காட்டிலும், வக்பு வாரியம் வழங்கிய தெளிவில்லாத பட்டியல் முக்கியமா? திருச்சி மாவட்டத்தில், ஒட்டுமொத்த கிராமத்தின் மீதான வக்பு வாரிய தடை நீக்கப்பட்டதாக, கலெக்டர் அறிவித்துள்ளார். அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, முடங்கியுள்ள சொத்துக்கள் மீதான தடையை உடைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sabareesan B
ஆக 13, 2024 05:52

ஐயா வணக்கம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி சித்ராவுத்தன் பாளையம் பஞ்சாயத்து சி அம்மாபட்டி பெஸ்ட் காட்டன் மில்ஸ் அருகில் சபரீசன் ஐயா எங்கள் பூர்விக இடம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தாங்கள் சென்ற வாரமே தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் கூறினீர்கள் மக்கள் குறை தீர்ப்பு நாளன்று இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஐயா


RAHMATHULLAH
ஆக 12, 2024 19:51

கரூர் மாவட்டம் குளித்தலை, பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதால் என்னுடைய இடத்தையும் அவர்களுடய இடமென்று தடை அளித்து இருக்கிறார்கள் வட்டாட்சிச்சியர் சான்று அளித்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறேன்


Jai
ஆக 12, 2024 14:03

2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடியும் தருவாயில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டமாற்றங்கள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சிகள் தான் காங்கிரஸ் திமுக. இதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையினருக்கு பெரும் துரோகம் செய்யும் வகையில் சட்டங்களை அப்போது மாற்றியுள்ளார்கள். 1) வகப் வாரியம் அவர்கள் எந்த இடத்தையும் தங்களுடைய சொத்து என்று அறிவிக்கலாம். 2) ஆனால் இதை எதிர்த்து கோர்ட்டில் முறையிட முடியாது. 3) ஆக்கிரமித்த வக்குப் வாரியத்திடமே சென்று முறையிட்டு குறைதீர்த்துக் கொள்ள வேண்டும். இது என்ன அநியாயம்? ஆக்கிரமித்தவனிடமே என்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது எப்படிப்பட்ட துரோகம்? மக்கள் சிந்திக்காமல் வெறும் 500க்கு ஓட்டு போடுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பின்னணியில் இது போன்ற மாபெரும் துரோகங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் விழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


தமிழ்வேள்
ஆக 12, 2024 11:48

கபத்துல்லாஹ் வை நன்றாக பார்த்தால் , சதுர வடிவ கட்டிடத்துக்கு பின்புறம், காசு போதாமையால் றஸூலுல்லாஹ் ,கட்டாமல் விட்ட அரைவட்ட வடிவ அடித்தளம் தெரியும் ...அதனை முழுமையாக்கி நோக்கினால், ஹிந்து கோவில் கருவறைகளின் , கஜப்ருஷ்ட வடிவம் புலனாகும் ...அத்தனையும் ஹிந்துக்கள் சொத்து என்று நாம் கிளம்பினால் என்ன ஆகும் ?


Nandakumar Naidu.
ஆக 12, 2024 10:50

வக்பு வாரியம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை ஏதோ சட்ட திருத்தமாவது வந்திருக்கிறதே. வக்பு வாரிய திருத்திய சட்டம் அமலுக்கு வந்தால் ஹிந்துக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் இந்த மத வெறி பிடித்த கூட்டத்திர்க்கு சரியான ஆப்பு அடிக்கப்படும்.


Subramaniam Mathivanan
ஆக 13, 2024 16:43

இந்த வக்பு வாரியத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு. தமிழக இந்துக்கள் ஒன்றிணைந்து திராவிட மற்றும் கூட்டணி கட்சிகளை துரத்த வேண்டும். செய்வீர்களா? இந்துக்களே?


N.Purushothaman
ஆக 12, 2024 10:12

தமிழ்நாட்டு தலைமை செயலகமாவது அரசின் நிலமா இல்லை அதையும் வாரியத்துக்கு சொந்தமான நிலமா மாத்தியாச்சா ?


N.Purushothaman
ஆக 12, 2024 10:09

பஞ்சமி நிலங்கள் கூட அந்த வாரியத்தின் சொத்தில் இருக்கலாம் ....வி சி க வுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இருக்காது ....


ராம்
ஆக 12, 2024 09:15

ரோசம் இல்லாத .....


karthik
ஆக 12, 2024 08:41

நம் நாட்டில் எந்த பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு மூலகாரணமாக கேடுகெட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் தான் காரணமாக இருக்கின்றன..


nathan
ஆக 12, 2024 08:30

இது வரை நான் நடுநிலை மனநிலையில் இருந்தேன். அணைத்து மதமும் சமம் என்று. ஆனால் இப்போதுதான் vakfu வாரியத்தின் வானளாவிய எல்லைகளை பற்றி தெரிந்த பின், அதற்கு உடந்தையாக இருந்த கட்சிகள் மீது நம்பிக்கை போய் விட்டது.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ