உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவி பேராசிரியர் பணி செட் தேர்வு அறிவிப்பு

உதவி பேராசிரியர் பணி செட் தேர்வு அறிவிப்பு

சென்னை:நாடு முழுதும் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில், பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தேர்வு அல்லது தமிழக அரசு நடத்தும், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான செட் தேர்வை நடத்த, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இதன் விபரங்களை, அப்பல்கலை அறிவித்துள்ளது. இதன்படி, ஜூன் 3 - 25 வரை, தேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்பங்களை, https://www.msuniv.ac.in/ என்ற இணையதளத்தில், வரும், 1 - 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ