உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தானியங்கி பட்டா மாறுதல்; வருவாய் துறை அறிவுறுத்தல்

தானியங்கி பட்டா மாறுதல்; வருவாய் துறை அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தானியங்கி முறை பட்டா மாறுதல் பணிக்காக, பத்திரப்பதிவின்போது, சரியான மொபைல் போன் எண்ணை அளிக்க வேண்டும்' என, வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தில், ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் போது, அதற்கான பத்திரப்பதிவு அடிப்படையில், பட்டா மாறுதல் செய்யப்படும்.

தானியங்கி முறை

பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், இதற்கான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், வரும் 15 முதல் தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இதுபற்றி, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மொபைல் எண்

தானியங்கி முறை பட்டா மாறுதல் திட்டத்தில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பாதியில் முடங்குகின்றன. இந்த விண்ணப்பங்களில், சொத்து வாங்குவோர் தங்களது சரியான மொபைல் போன் எண்ணை கொடுக்காமல் இருப்பதே, விண்ணப்பங்கள் முடங்க காரணம் என, தெரியவந்துள்ளது. 'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவுக்கு விபரங்களை உள்ளீடு செய்யும் போது, சொத்து வாங்குவோரின் உண்மையான மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியம். எனவே, பத்திரப்பதிவு பணியின் போது, மொபைல் போன் எண் விபரத்தை சரியாக பதிவிடுவதை, சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் உறுதி செய்ய வேண்டும். பொது மக்களும் இதில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.அப்போது தான் பட்டா மாறுதல் தொடர்பாக, எஸ்.எம்.எஸ்., தகவல்களை பெற முடியும். இதன் அடிப்படையிலேயே தொடர் நடவடிக்கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

GRDhejesh
ஜூன் 11, 2024 12:15

வி ஏ ஓ. இருக்கும் வரை இதெல்லாம் சாத்தியமில்லை மினிமம் 15000


Sampath Kumar
ஜூன் 11, 2024 11:01

தான் இயங்கவே பட்டா மற்றம் எய்தலும் இதிலும் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது அதனை இயக்குறவரு நினைத்தாள் கோல் மால் பண்ணலாம் இந்த ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் அய்யா பட்ட காலத்தில் இருந்தே அரிய வம்சா வலியனரால் தான் நடத்த பட்டு உள்ளது


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 11, 2024 09:45

சொத்து வாங்குபவர்களின் தொலைபேசி எண்ணை கொடுப்பதற்கு பதிலாக ஆவண எழுத்தர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்துவிடுகிறார்கள். அப்போதுதான் சம்திங் வாங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் சார்பதிவாளர்களின் கூட்டு களவாணிகள். லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டால்தான் நாடு உருப்படும். அதை இந்த திருட்டு திராவிட கூட்டம் ஒருபோதும் செய்யப்போவதில்லை.


krishna
ஜூன் 11, 2024 09:17

99.9 % உண்மை. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.


R.RAMACHANDRAN
ஜூன் 11, 2024 08:49

லஞ்சம் இல்லையேல் சேவை இல்லை என்பதை அரசு ஊழியர்கள் உறுதியாக உள்ளதால் ஏதாவது காரணம் காட்டி அல்லது காரணம் இல்லாமல் கிடப்பில் போடுவது அல்லது நிராகரிப்பது என திட்டமிட்டு செய்யப்படுகின்றனர்.கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நேரில் அழைத்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்வு காணும் பணியில் உள்ளனர்.


nakkeerapuram Samy
ஜூன் 11, 2024 06:56

மொபைல் எதற்கு? பதிவு நடந்த பிறகு அந்த நபருக்கு போன் போட்டு அது இல்லை இது இல்லை நேரில் விளக்கவும்னு வரச்சொல்லி பணம் பறிக்க திட்டம் போடுகிறார்கள் இது தடுபாபதற்காகவே நேரடி பட்டா அறிமுகப்படுத்தபட்டது நிறை குறையிருந்தால் பதிவாளர் மூலமே சரிசெய்து பதிவு செய்தாலே போதும் வருவாய் துறை தலையீடு இருக்கூடாது மீண்டும் வஞ்சம் வாங்கவே இந்த ஏற்பாடு போதும்பா உங்க சேவையால் மக்கள் பட்ட பாடு..பிணம் திண்ணிகளிடமிருந்து விடுதலை பெற்று மீண்டும் மாட்ட தயாரில்லை..


சூரியா
ஜூன் 11, 2024 06:29

SMS வருவதில்லை. நேரில் வரும்படி அழைப்பு அல்லவா வருகிறது!


nakkeerapuram Samy
ஜூன் 11, 2024 06:58

எதற்கென்று புரிகிறதா பணம் கேட்க...? இவர்கள் திருந்தவே மாட்டார்கள்?அடுத்தவன் காசில் வயிறு வளர்த்த பழக்க தோசம்..


Raj
ஜூன் 11, 2024 06:26

பார்த்து பட்டா தனி நபர் பெயரிலிருந்து அரசாங்கத்திற்கு மாறிவிடப்போகிறது.


Saravana kumar
ஜூன் 11, 2024 03:54

அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட திட்டத்தை முடக்கி அதை ஏதோ புதுமையான திட்டம் போலும் ஆட்சியாளர்கள் நடித்துக்கொண்டு அதிகாரிகள் காசு பார்க்க ஏதேதோ கதையை அள்ளி விடுகிறார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை