வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மையை உரைக்க கூறியதற்கு நன்றி சகோ...
''கூடுதலாக ஒரு மொழி கற்றதால், சாகித்ய அகாடமி விருது பெற முடிந்தது,'' என பேராசிரியர் விமலா தெரிவித்தார்.அவரது பேட்டி:உலக மகளிர் தினத்தில், சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த நான், என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. தந்தை இறந்த நிலையில், என் தாய்தான் கஷ்டப்பட்டு, என்னை படிக்க வைத்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், முனைவர் பட்ட ஆய்வுக்கு சென்ற போது, கூடுதலாக ஒரு மொழியாக, மலையாளம் படித்தேன். அதனால் தான், என்னால் மலையாள நாவலை, தமிழில் சிறப்பாக மொழி பெயர்க்க முடிந்தது; விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
உண்மையை உரைக்க கூறியதற்கு நன்றி சகோ...