உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூரண நலமுடன் வீடு திரும்பினார் பி.சுசீலா: வீடியோ வெளியிட்டு நன்றி

பூரண நலமுடன் வீடு திரும்பினார் பி.சுசீலா: வீடியோ வெளியிட்டு நன்றி

சென்னை: தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாடகி பி. சுசீலா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.சென்னை காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இசையரசி P.சுசீலாம்மா , சிகிச்சைக்கு பின் இப்போது நலமாக வீடு திரும்பியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n53zopxi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோவில், காவேரி மருத்துவமனையில் மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் பி.சுசீலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 19, 2024 20:51

மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி.


Saai Sundharamurthy AVK
ஆக 19, 2024 20:45

நல்ல ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும். நிச்சயம் அந்த கடவுள் வாழ வைப்பார்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை