உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெயர் மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் மதுரையில் பில் கலெக்டர், உதவியாளர் கைது

பெயர் மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் மதுரையில் பில் கலெக்டர், உதவியாளர் கைது

மதுரை : மதுரையில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் ஆறுமுகம் 50, அவரது உதவியாளர் சுதாகரன் 25, கைது செய்யப்பட்டனர்.மதுரை கண்ணனேந்தலைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பரசுராமன் 74. மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை மகன் ஈஸ்வர கண்ணனுக்கு தானமாக வழங்கினார். இதனால் மகன் பெயருக்கு சொத்து வரி மாற்றம் செய்ய மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த மனு கண்ணனேந்தல் பில் கலெக்டர் ஆறுமுகத்தின் ஒப்புதலுக்கு வந்தது.பெயர் மாற்றம் செய்ய பரசுராமனிடம் ஆறுமுகம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். தரமறுத்தவரிடம் 'பேச்சுவார்த்தை' நடத்திய ஆறுமுகம் இறுதியாக 'ரூ.10 ஆயிரம் தந்தால் மட்டுமே ஒப்புதல் அளிப்பேன்' என திட்டவட்டமாக கூறினார். இதுகுறித்து லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் பரசுராமன் புகார் அளித்தார்.நேற்று காலை கண்ணனேந்தலில் உள்ள பில் கலெக்டர் அலுவலகத்தில் பரசுராமனிடம் ஆறுமுகமும், உறவினரான மாநகராட்சி ஊழியர் அல்லாத உதவியாளர் சுதாகரனும் லஞ்சம் பெற்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, சூரியகலா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raghavan
மே 18, 2024 21:16

திருட்டு ரயில் ஏறி வந்த குடும்பம் கோடி கோடியாக பணம் சேர்த்துஇருக்கும்போது நாமும் தான் கொஞ்சம் காசுபார்க்கலாமே என்கிற நப்பாசை இப்போது உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா


Shanmugam
மே 18, 2024 16:55

சார், அந்த புல்லிங்கோ dress code and specifications


nizamudin
மே 18, 2024 12:22

இப்படி செய்யிறீங்க நம்மக்கு ஏதும் பாத்தது காய் நிறைய சம்பளம் மக்கள் எப்படி கஷ்டம் போடுறாங்க வீட்டில் உள்ள பெண்கள் இந்த மாதிரி அநியாய காசு வாங்க மாட்டோம்... உன்னை விட்டு பிரிவோம் என்று சொல்லி திருத்துங்கள் வேறு வழி இல்லை


கல்யாணராமன் சு.
மே 18, 2024 10:35

அந்த உதவியாளரை பார்த்தால் புள்ளிங்கோ பய்யன் மாதிரி இருக்கு ?? அரசு வேலைக்கோ, அரசு ஊழியரின் தனிப்பட்ட உதவியாளருக்கோ dress code / grooming code அப்படின்ன ஒண்ணும் கிடையாதா ??


Rangarajan
மே 18, 2024 07:43

இவர்கள் திருந்தவே மாட்டார்கள் ஓவ்வொரு வருக்கும் எவ்வளவு சம்பளம், இதில் கிம்பளம் வேறு தேவையா


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி