உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பட்டமான ஹிந்தி திணிப்பு: ராமதாஸ்

அப்பட்டமான ஹிந்தி திணிப்பு: ராமதாஸ்

சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள், பண்பாட்டு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, தமிழ் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்தி, சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை.வெளிநாடுகளில் தமிழ் கற்பிக்க, பிறமொழி அறிவு அவசியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆங்கிலத்தின் வழியாக யாருக்கு வேண்டுமானாலும், தமிழ் கற்றுக் கொடுக்க முடியும். ஹிந்தி, சமஸ்கிருத ஆசிரியர் பணிகளுக்கு தமிழ் மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழாசிரியர் பணிக்கு மட்டும், ஹிந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பாகும்; இதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
செப் 18, 2024 20:06

மத்திய பாஜக அரசுக்கு எதிராக இப்படி எல்லாம் பேசினால் பாஜக கூட்டணியில் இருந்து உங்களை விலக்கி விடுவார்கள் என்று நினைத்தீர்களா? ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று தமிழக பாஜக கூட்டணியில் இருக்கும் ஒரே கட்சி நீங்கள் தான், அதனால் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள்!


N Sasikumar Yadhav
செப் 18, 2024 19:43

ராமதாசின் பேத்திகளுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ? ஊருக்குதான் உபதேசம்


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 10:13

உங்க பேத்திகள் இருவரும் சி பி எஸ் சி ஸ்கூல்ல படிச்சவங்க ன்னு எங்களுக்கு தெரியும் .... அவங்க பெயர்களிலும் தமிழ் இல்ல ன்னு எங்களுக்கு தெரியும் .... போ ..


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 10:12

விருபத்தக்க தகுதி - Desirable qualification - என்று அறிவிப்பதில் என்ன தவறு ????


S. Gopalakrishnan
செப் 18, 2024 09:16

சேம் சைடு கோல் போடும் வீரர் !


Dharmavaan
செப் 18, 2024 06:51

இவன் என்ன அனுமதிப்பது யார் கேட்டார்கல்


முக்கிய வீடியோ