உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகரிசல் குளம் அகழாய்வில் தென்பட்ட செங்கல் கட்டுமானம்

விஜயகரிசல் குளம் அகழாய்வில் தென்பட்ட செங்கல் கட்டுமானம்

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் நான்கு குழிகளில் சிதைந்த நிலையில் செங்கல் கட்டுமானம் தென்பட்டது.விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை என 800 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட நான்கு குழிகளில் செங்கல் கட்டுமானம் தென்பட்டது. இவைகள் எட்டு சென்டிமீட்டர் ஆழம் முதல் ஒரு மீட்டர் ஆழம் வரை, நான்கு அடி பரப்பளவில் உள்ளது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் ''நான்கு குழிகளில் செங்கல் கட்டுமானம் சிதைந்த நிலையில் தென்பட்டுள்ளது. இங்கு பானைகள் போன்ற மக்கள் பயன்பாட்டிற்குரிய பொருட்களும் அதிக அளவில் கிடைத்து வருவதால் இது வாழ்விடமாக பயன்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும் கிடைத்த செங்கல் 8 சென்டிமீட்டர் அகலம், 31 சென்டிமீட்டர் நீளம், 6 சென்டிமீட்டர் கன அளவில் கிடைத்துள்ளது. பழங்காலத்தில் மட்டுமே செங்கல் அளவு இவ்வாறு இருக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை