உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீங்கள் கேட்கலாமா பழனிசாமி?

நீங்கள் கேட்கலாமா பழனிசாமி?

“எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தன் மீதான ஊழல் குறித்த சி.பி.ஐ., விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றவர். இப்போது, சி.பி.ஐ., விசாரணை கேட்கலாமா,” என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பின், முதல்வர் பேசியதாவது:கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, கடந்த 20ம் தேதி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அனைத்து கட்சியினரும் பேசினர். அதற்கு நான் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அன்றைய தினம் அ.தி.மு.க., தன் கருத்தை பதிவு செய்திருக்க வேண்டும். மாறாக தேவையற்ற பிரச்னையை எழுப்பினர்.லோக்சபா தேர்தலில், 40க்கு 40 எடுத்தது, அவர்களுடைய மனதை உறுத்துகிறது. அதை மக்களிடம் இருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக, இந்த காரியத்தை திட்டமிட்டு தொடர்ந்து செய்கின்றனர். நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்வது நியாயம் தான். ஜனநாயகத்தில் எல்லாருக்கும் அந்த உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்.அது, நியாயமான முறையில் இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும். அந்த ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பேசியுள்ளனர். இதே பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவர் மீது சி.பி.ஐ., விசாரணை கொண்டு வரப்பட்டதை மறந்திருக்க மாட்டார். தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி எழுப்பிய குற்றச்சாட்டில், சி.பி.ஐ., விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சி.பி.ஐ., மீது நம்பிக்கை இருந்தால், அந்த சவாலை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ., மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான், அதற்கு தடையுத்தரவு வாங்கிய வீராதி வீரர் தான், இன்றைக்கு இந்த விஷயத்தில், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என முழங்கிக் கொண்டிருக்கிறார்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை