உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவில், '' சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் படி, அமலாக்கத் துறையில் மனு அளித்துள்ளேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ndvqc0st&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கும், தகுதி நீக்கம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், '' நயினார் நாகேந்திரன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், '' பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர். நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
ஏப் 18, 2024 22:18

என்று எந்த அயோக்கியன் தான் அயோக்கியன் தான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்?


sankar
ஏப் 18, 2024 17:16

நயினார் நாகேந்திரன் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றும் என்பதால் முதல்வர் திருட்டு கூட்டம் செய்யும் சதி வேலை இது


sankar
ஏப் 18, 2024 17:14

அப்படி பார்த்தல் திமுக வேட்பாளர்கள் எல்லாருமே தகுதி இழந்தவர்கள்


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 18, 2024 14:04

மக்கள் எல்லோரும் மிக தெளிவானவர்கள் அது நாயனாரின் பணம் தான் என்பது வெட்ட வெளிச்சம் இருப்பினும் தாங்கள் மட்டும் தான் உத்தமர் என்று ஊரை ஏமாற்ற கேவலமாக வேஷம் போடுவார்கள் இதை எல்லாம் காலம் காலமாக பார்த்து சலித்து விட்டது மக்களுக்கு சூடு சொரணை இருந்தால் -திருநெல்வேலி தொகுதியில் அவரை டெபாசிட் இழக்கும் வகையில் செய்ய வேண்டும்


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 13:48

தகுதியிழப்பு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே MLA பதவியை விட்டு நீக்க முடியும். (அதிலும் எல்லோரும் ராகுல் பொன்முடி போல தப்பிக்க முடியாது). வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு வரும் இது போன்ற புகார்களை வருமானவரித் துறை மட்டுமே விசாரிக்கும்.


Dharmavaan
ஏப் 18, 2024 13:45

விசாரணை இன்றி எப்படி நடவடிக்கை


GMM
ஏப் 18, 2024 13:44

அங்கித் திவாரி வழக்கில் திமுக சரவணன் நாற்பது லட்சம் லஞ்ச பணம் வைத்தார்? திமுக பிரமுகர் எஸ்கேப் அரசு அதிகாரி விசாரணை வளையத்தில் நயினார் நாகேந்திரன் வழக்கில், தொகை அதிகம் என்பதால், மத்திய விசாரணை அமைப்புகள் தான் நடவடிக்கை ஆரம்பிக்க முடியும் மாநில போலீசார் பறக்கும் படை இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் சந்தேகிக்கும் பணம் பொருளை அந்த இடத்தில் பாதுகாக்கும் பணி மட்டும் தான் போலீஸார் செய்ய வேண்டும் பறிமுதல், முதல் தகவல் அறிக்கை தானே தயாரிக்க அதிகாரம் போலீசுக்கு இல்லைஎப்படி தேர்தல் ஆணையம் மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும்? தேர்தல் ஆணையம் மீது வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அதிகாரம் பெற்ற அமைப்பு கிடையாது


Dharmavaan
ஏப் 18, 2024 13:43

கோர்ட் திமுகவிற்கு சாதகமாகி விட்டது


Rajkumar
ஏப் 18, 2024 13:10

பாஜக என்பதால் தான் இந்த அச்டின்வேற கட்சியாக இருந்தால் கேண்டிடேட் தகுதி நீக்கம் தான் எந்த கட்சியாக இருந்தாலும் சட்ட படி நடவடிக்கை அவசியம்


Palanisamy Sekar
ஏப் 18, 2024 12:57

என்ன திட்டம் திட்டினாலும் சரி, இதுபோன்ற குற்றங்களை ஒருபோதும் நயினார் போன்ற நல்லவர்கள் செய்திட மாட்டார்கள் திமுகவின் சதியில் இதுவும் ஒருபகுதி என்பது உலகறிந்த உண்மை ஐம்பது கோடிக்கு மனசுக்கு பிடித்தமானவருக்கு வீடு வாங்கித் தருகின்ற காலத்தில் இந்த நான்கு கோடி ரூபாய் ஒரு தூசி இந்த திட்டம் தீட்டியவர்களுக்கு


Indian
ஏப் 18, 2024 13:37

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க


krishnamurthy
ஏப் 18, 2024 15:09

கருத்து சரியே


மேலும் செய்திகள்











புதிய வீடியோ