உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய வழக்கில் கைதான 11 பேரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., மனு

கள்ளச்சாராய வழக்கில் கைதான 11 பேரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., மனு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சாராயம் விற்றது, மெத்தனால் சப்ளையர் உள்ளிட்ட 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சாராய வியாபாரி கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சேஷாசமுத்திரம் சின்னதுரை, விரியூர் ஜோசப், சூ.பாலப்பட்டு கதிரவன், கண்ணன், மெத்தனால் சப்ளையர் மடுகரை மாதேஷ், சென்னை சிவக்குமார், பன்ஷிலால், கவுதம்சந்த் உள்ளிட்ட 11 பேரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு வரும் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ