| ADDED : மார் 24, 2024 11:12 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : ''ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது ''என தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் உள்ள தனது குலதெய்வமான பேச்சி அம்மன் கோயிலுக்கு நேற்று காலை 10:35 மணிக்கு வந்த பன்னீர்செல்வம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பா.ஜ.,வை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்றார். பின்னர் ஆண்டாள், வடபத்ரசயனர் கோயில்களில் தரிசனம் செய்தார்.