உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் உட்பட 5 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல்

ஜாபர் சாதிக் உட்பட 5 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேர் மீது, என்.சி.பி., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் என்.சி.பி., என்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.முன்னதாக, டில்லியில் இருந்து உணவுப் பொருட்கள் போல, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற, ஜாபர் சாதிக் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த முகேஷ், 33; முஜிபுர், 34, மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தம், 45, என்பவரும் கைதானார். இவர்கள், சென்னை பெருங்குடியில் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தது தெரிய வந்தது. அதற்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜாபர் சாதிக்குடன் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் மீது, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A1Suresh
ஏப் 15, 2024 10:04

இதுவே ஆஸ்திரேலியா, மலேஷியா, சிங்கப்பூராக இருந்திருந்தால் குற்றவாளிகள் இந்நேரம் பரலோகம் போயிருப்பர்


karupanasamy
ஏப் 15, 2024 06:49

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பெயர்கள் ஏன் விடுபட்டுள்ளது


D.Ambujavalli
ஏப் 15, 2024 06:32

இந்த ஐந்து பேரோடு கேஸை முடித்து மூடிவிட்டு 'பெரிய தலைகளை' நெருங்காமல் இருக்க ஏதாவது டீல் பேசப்பட்டிருக்கலாம்


Kasimani Baskaran
ஏப் 15, 2024 05:28

பிரமிப்பூட்டும் வேகம் - அதாவது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருப்பது புலப்படுகிறது - பல ஆதாரங்களையும் கூட அள்ளிக்கொடுத்து இருக்கலாம் அப்படியென்றால் தேர்தல் முடிந்த கையோடு பிரபலங்கள தூக்கப்படலாம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ