உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் சதுரங்க ஆட்ட காய்கள்

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சதுரங்க ஆட்ட காய்கள்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள் கண்டெடுக்கப்பட்டது.விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, 1250க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தவிர அதிக அளவிலான உடைந்த நிலையில் பழங்கால செங்கற்கள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், இங்கு முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான சான்று கிடைத்துள்ளது. விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். சதுரங்கம் ஆடியுள்ளது தெரிய வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை