உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாமதம் தானே தவிர நிராகரிப்பில்லை: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஆறுதல்

தாமதம் தானே தவிர நிராகரிப்பில்லை: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் எப்போதெல்லாம், தி.மு.க., ஆட்சி அமைகிறதோ, அப்போது தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 53,000 ஆசிரியர்களை காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்தது; கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக்குழு மாற்றத்தை பலமுறை கொண்டு வந்தது எல்லாம், தி.மு.க., அரசு தான். குடும்ப நல நிதி, 3 லட்சம் ரூபாயை, தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவதிலும், இந்த அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை. அந்த தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டு சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளது தான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கி சொல்லும் ஒரே அரசு தி.மு.க., அரசு தான்.மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

s vinayak
ஏப் 10, 2024 16:05

நிச்சயம் புள்ளி கூட்டணி வெற்றி பெறாது என்பதால் ஊழியர் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற வாக்குறுதி மேலும் சிற்றொன்றிய அரசு ஊழியருக்கு புள்ளி மத்திய அரசு அமைந்தால் என்ன செய்ய முடியும்


GANESUN
ஏப் 10, 2024 15:33

இது தெரிஞ்சும் , பாம் வைக்கறது, கஞ்சா விக்கறது ஏன் செய்யறாங்க ?


Barakat Ali
ஏப் 10, 2024 12:12

வேதத்தை மறைத்தவர்கள் பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்பவன் சுயநலத் தொண்டன் இந்த மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான் அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு என்று நபி அவர்கள் கூறினார்கள்


Krishnakum
ஏப் 10, 2024 09:00

இது சுத்த வாய் சவடால் அரசு ஊழியர்களே உசார் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற படும் என்று கூறுகிறார் அவருக்கே தெரியும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி வராது என்று சும்மா அடித்து விடுகிறார் இன்னும் ஏமாறவேண்டாம்


என்றும் இந்தியன்
ஏப் 09, 2024 16:43

உளறலுக்கு நோபல் பரிசு உண்டென்றால் நிச்சயமாக தான்


Kuppan
ஏப் 09, 2024 01:25

மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுத்த முதல் கையெழுத்தே இன்னும் போடவில்லை உங்கள் வாக்குறுதி தொ அல்லது வதோ , நடக்கவே நடக்காத இந்டி கூட்டணி வெற்றி பெற்றால் அதாவது அத்தைக்கு மீசை முளைத்தால் உங்கள் வாக்குறுதி இன்ப நிதி ஆட்சி காலத்திற்ற்குள் நிறைவேற்ற படும்னு உங்கள் ஆசையை தூண்டுகிறார், ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவன் ஆசையை தூங்கிட வேண்டும் அதைத்தான் செய்கிறார் விடியல்


sundarsvpr
ஏப் 08, 2024 19:13

அரசியல்வாதிகள் வரும்காலத்தை பற்றி கவலைப்படமாட்டார்கள் யாருடைய வருங்காலத்தை பற்றி மக்களின் நாம்தான் கவலைப்படவேண்டும் எந்த இலவசம் கொடுத்தாலும் பிச்சைக்காரர்போல் பெறுகிறோம் ஆனால் உண்மையில் பிச்சைக்காரர் நாம் இல்லை இது தேவை இல்லை ஒதுக்கினால் தேவையற்ற அரசியல்வாதிகள் ஒதுக்கப்படுவார்கள்


பாரத இந்துத் தமிழன்
ஏப் 08, 2024 19:11

மாநில அரசுப்பணியாளர்களின் குறையை தீர்க்க மத்தியில் நெல்லிக்காய் கூட்டணி ஆட்சி அமையவேண்டுமா?அரசுப்பணியாளர்கள் நன்மை பெற நாடு சீர்குலைய வேண்டுமா? சிந்திப்பீர் பொதுமக்களின் சாபத்திற்கு ஆளாகாமல், அண்ணாமலை ஆட்சி தமிழகத்தில் மலர, இம்முறை நாற்பதிலும் தூயவர்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள் சவுடால் வாக்குறுதிகளை ல்லிருந்து கேட்டு கேட்டு சலித்துப் போனது வாக்குறுதியில் இல்லாத ஒன்று மட்டும் கச்சிதமாக நிறைவேறி வருகிறது அதுதான், கட்சித்தலைவர்கள், மன்னர்கள் போல் உயர்ந்த வாழ்வுடன், வருடம் தோறும் சீரான முன்னேற்றம், ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாமல் போனாலும் அது மட்டும் எப்படி சாத்தியமாகிறது? கட்சிப்பணம் அரசுப்பணத்தைக்காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது ஆனால் பணிபுரியும், அரசுவேலையாட்கள், ஆசிரியர்கள், தொகுப்பு ஊதியம் புரிவோர்கள், அன்றாடக்கூலி செய்வோர் வாழ்வு மட்டும் அப்படியே உள்ளது ஏன்? இனியும் நம்பிப்பிரயோசனமில்லை


Rengaraj
ஏப் 08, 2024 17:13

இப்படி பேசினால் அரசு ஊழியர்களை ஏமாற்றிவிடலாம் என்று முதல்வர் தப்புக்கணக்கு போடுகிறார் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் மத்திய அரசின் புதிய ஊதிய கொள்கை முதல் அமலுக்கு வரும் மத்தியில் அமையும் புதிய அரசு இதை அமல்படுத்தவேண்டும் அதை ஒட்டி எல்லா மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை மாற்றி அமைக்க வேண்டும் இதனால் கூடுதல் செலவு ஏற்படும் இதற்கேற்ப பட்ஜெட் அமைய வேண்டும் நமது மாநிலத்திலும் இதே நிலைமைதான் ஏற்கெனெவே கடன் தொகை மாநிலத்தில் அதிகாகமாகிக்கொண்டே செல்கிறது ஊழியர்களுக்கு என்ன செய்துவிடும் இந்த தமிழக அரசு ? -ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை கூடவா அரசு ஊழியர்கள் நினைத்துப்பார்க்க மாட்டார்கள் ?? திமுக வுக்கு சாதமாக செயல்பட்டால் தங்கள் தலையில் மண்ணை தாங்களே வாரி போட்டுக்கொள்கிறார்கள் என்று அர்த்தமாகிவிடும்எனவே அரசு ஊழியர்கள் நம்பி ஏமாறக்கூடாது


K.Ramachandran
ஏப் 08, 2024 15:40

அந்த பயம் இருந்தா போதும் அரசாங்க ஊழியர் வோட்டை அல்லனும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ