உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் முதல்வர் ஆய்வு

பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில்ல முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ள நிலை மற்றும் கோவை நீலகரி உள்ளிட்ட மலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணி குறித்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 24 மணி நேரம் செயல்படும் பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் அழைப்புகள், பணிகள்,காவிரி கரையோர மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 02, 2024 19:59

நோவாம நோம்பு கும்பிடுவது என்பது இதுதான். தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் ஆய்வாம்...? ஆஹா... மெச்சுகிறேன் முதல்வரின் மக்கள் மீதுள்ள ஆதங்கத்தை....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை