உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சி மாநகர நல அலுவலர் மீது புகார்

மாநகராட்சி மாநகர நல அலுவலர் மீது புகார்

திண்டுக்கல்:பணி செய்ய விடாமல் தடுப்பது,அநாகரீகமாக பேசுவது என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி மாநகர நல அலுவலர் பரிதாவாணி மீது பொது சுகாதார பிரிவில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள்,அலுவலர்கள் மேயரிடம் புகார் கொடுத்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதாரபிரிவில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள்,ஆய்வாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதியிடம் கொடுத்த மனுவில், நாங்கள் நகரின் துாய்மையை பராமரித்தல்,மக்கும் குப்பையை உரமாக்குதல், பொது மக்கள் குடிநீரில் குளோரின் கலப்பது, பிறப்பு,இறப்பு சான்றிதழ் தயாரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளை செய்கிறோம். மாநகர் நல அலுவலர் பரிதாவாணி,எங்கள் செயல்பாடுகளை தடுக்கும் விதமா செயல்படுகிறார். ஏரியா வாரியாக பணம் வசூலிக்க கூறுகிறார். அதை கேட்காமல் இருப்பவர்களை அவமரியாதையாக பேசுகிறார். பிறப்பு,இறப்பு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறார். அடிக்கடி தரக்குறைவாக பேசுகிறார். அவரது அறைக்குள் அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத நபரை வைத்து கொண்டு மிரட்டும் தொணியில் பேசுகிறார். இந்நிலையில் நல அலுவலர் மீது புகார்அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூன் 25, 2024 19:39

திண்டுக்கல் மாநகர நல அலுவலர் பரிதாவாணி இந்தளவுக்கு துள்ள திமுக பின்புலத்தில் யார் சப்போர்ட்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை