மேலும் செய்திகள்
ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்
1 hour(s) ago | 1
ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார்
4 hour(s) ago
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
5 hour(s) ago
சென்னை:ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள், மேலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், 2.20 கோடி முன்னுரிமை, அந்தியோதயா, முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 3.30 லட்சம் டன் அரிசி தேவை.முன்னுரிமை, அந்தியோதயா பிரிவுக்கான, 2.04 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு, தமிழகத்திற்கு இலவசமாக வழங்குகிறது. மீதி அரிசியை தமிழக அரசு, கிலோ 39 ரூபாய்க்கு வாங்குகிறது.அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷன் அரிசியை வாங்குவதில்லை. அவர்கள், சர்க்கரை, பருப்பு, பாமாயில் வாங்கி விட்டு, அரிசியை கடை ஊழியர்களை எடுத்து கொள்ளுமாறு கூறுகின்றனர். சில ஊழியர்களும் அரிசியை விற்றது போல பதிவு செய்து, கள்ளச்சந்தையில் பணத்திற்கு விற்கின்றனர்.பல்வேறு தரப்பினரிடம் இருந்து இந்த அரிசியை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்துவதாக புகார்கள் எழுகின்றன. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ரேஷன் அரிசி கடத்தல் அதிகம் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, அண்டை மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இலவச அரிசி வினியோகம் குறித்து, ரேஷன் கடைகளில் தீவிர ஆய்வு செய்யுமாறும், இருப்பு, விற்பனையை சரிபார்த்து, கையிருப்பில் அதிக அரிசி வைத்திருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.அரிசி கடத்தலுக்கு துணை போகும் ஊழியர்கள் மட்டுமின்றி, கிடங்கு மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 1
4 hour(s) ago
5 hour(s) ago