உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து அரங்கேறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் நீட் இருக்கிறது. தமிழக முதல்வர் 2017ம் ஆண்டில் இருந்து நீட் எதிர்ப்பு இயக்கத்தை நடத்துகிறார். பழனிசாமியால் நீட் தேர்வு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வரவில்லை.

குளறுபடி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தயாரித்து கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளோம். நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து அரங்கேறுகிறது. நடப்பாண்டில் நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

கருணை மதிப்பெண்

67 பேர் எப்படி முழு மதிப்பெண் பெற்றார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பினால், கருணை மதிப்பெண் வழங்கப்படுள்ளது எனக் கூறுகின்றனர். தாமதமாக வருவோரை அனுமதிக்காத நிலையில், பிறகு எப்படி நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது. அவர்களுக்கு ஏன் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. நீட் தேர்வில் பெரிய மோசடி நடந்துள்ளது. உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கவில்லை.

பாதிப்பு

நீட் தேர்வில் நடந்த குளறுபடியால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடந்துள்ளது. ஒரு கேள்வி விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும். ஒரு கேள்வி தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும். நீட் தேர்வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

M Ramachandran
ஜூன் 13, 2024 20:29

அப்படி யாகில் தம்பட்டம் அடிக்க வேண்டாம். நீதி மன்றங்களுக்கு செல்லுங்கள்


krishnamurthy
ஜூன் 13, 2024 18:26

2017 நீதிமன்றம் போகலாமே


Raghavan
ஜூன் 13, 2024 17:47

ஆடத்தெரியாத யாரோ முற்றம் கோணலாக இருக்கிறது என்றாளாம். இங்கு ஒரு மாநிலத்தில் tnpc தேர்வை ஒழுங்காக செய்யமுடியவில்லை அதுவும் ஒரு 6000 காலி இடங்களுக்கு 3 லக்ஷம் பேர் பரீட்சை எழுதுகிறார்கள். நீட் என்பது அகில இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் யூனியன் பிரதேசங்களிலும் நடக்கிறது. உங்கள் மந்திரிகளுக்கு வருமானம் போச்சு உங்கள் பங்கும் இப்போது இல்லை. பேரம் ஏதேனும் இருக்கலாம் நீட் தேர்வை ஒழிப்பதில். யார் கண்டார்கள்


இவன்
ஜூன் 13, 2024 17:36

குரூப் 4 ல வெறும் வெள்ளை பேப்பர் அ question paper னு கொடுத்து இருகாங்க அத போய் பாருங்க ??


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 16:53

இருபது லட்சம் பேர் தேர்வெழுதும் போது ஒரே மார்க்கை பல ஆயிரம் பேர் பெறுவது இயற்கை. எழுபது, எண்பதுகள் வரை தமிழக SSLC தேர்வில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் சாத்தியமாக இருந்தது. இப்போ மொழிப் பாடங்களில் கூட பலர் நூற்றுக்கு நூறு எடுக்கின்றனர்.இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது?.


selvelraj
ஜூன் 14, 2024 06:15

ஐயா இது சமச்சீர் கல்வி நடத்தும் திராவிட மாடல். இங்கு எந்த குப்பனும் சுப்பனும் 100க்கு 1000 மதிப்பெண் கூட எடுக்க முடியும்.


krishna
ஜூன் 13, 2024 16:22

ORU MAANILATHIL NADAKKUM TNPSC GROUP 4 THERVAI NADATHA THERIYAADHA DRAVIDA MODEL AMAICHAR MATTRAVARGALAI KURAI SOLVADHU ASINGATHIN UCHAM.


ram
ஜூன் 13, 2024 15:13

உங்களுக்கு நீட் ஒழியனும்.. நீங்க அத்துனை அமைச்சர்களும் நல்லா கல்லாக்கட்டனும்... நீட் வந்ததுலே இருந்து உங்களோட மருத்துவக்கல்லூரி வருமானம் முழுதும் மொத்தமா காவு வாங்கிடுச்சு. . அதனாலே உங்களுக்கு இப்போதைக்குகையில் கிடைத்திருக்கு இந்த நீட் தேர்வு மதிப்பெண் குழப்பம். சும்மாவே ஆடுவீங்க ஆனாலும் நீங்க சொல்லும் பொய்களை இன்னும் இந்த கூட்டம் நம்புது பாருங்க..


sethu
ஜூன் 13, 2024 14:59

1947 முதல் இன்னும் நிஹானஸ்தானம் பெற்றுக்கொண்டு தசமபாகத்தில் பங்குவங்கி திமுக .


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 13, 2024 14:58

இன்னுமா தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுகிறது..ரகசியம் தெரிந்த கட்சி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. சரி இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.பொறுத்திருந்து பார்ப்போம். அப்பாவும், மகனும் எவ்ளோ பேச்சு பேசினார்கள். அவர்கள் நீட் விஷயத்தில் செய்யப்போகும் சாதனை


sethu
ஜூன் 13, 2024 14:55

பழனிச்சாமியால் நீட் தேர்வூ வந்ததா அவரு எப்போது பார்லிமென்டில் எம்பியாக ஒட்டு போட்டார் கடைசியில் இந்த சுகாதாரத்துறை அமைச்சருக்கு என்ன ஆக்ச்சு பேசுபவர்கள் எல்லோருமே பொய்ச்சொன்னால் எப்படி திமுக வின் கல்லூரியில் படித்த எவனுக்கும் உண்மை என்ற வார்த்தையே மறந்து போச்சு . ஒரு யோக்கியன் இல்லாத கட்சி திமுக மட்டுமே. ஒருவேளை ஏசுநாதர் 2026ல் வந்தாலும் வரலாம்..ஆனால் திமுகவின் வளர்ப்பினர்களுக்கு உண்மை ஒருபோதும் வராது .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை