உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5வது நாளாக சிக்காத சிறுத்தை: மயிலாடுதுறையில் தொடர் பீதி

5வது நாளாக சிக்காத சிறுத்தை: மயிலாடுதுறையில் தொடர் பீதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த, 2ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. கடந்த, 3ம் தேதி காலை முதல் வனத்துறை, தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சிறுத்தையை தேடி வருகின்றனர்.சிறுத்தை ஆரோக்கியநாதபுரத்தில் தென்பட்டதாக கிடைத்த தகவலில், வனத்துறை திருச்சி மண்டல தலைமை பாதுகாவலர் சதீஷ், நாகை மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் ஆகியோரின் ஆய்வில் சிறுத்தையின் கால் தடம் உறுதி செய்யப்பட்டது.கோவை ஆனைமலை புலிகள் காப்பக வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினர், 14 கேமராக்களை ஆரோக்கியநாதபுரத்தில் பொருத்தினர்.சிறுத்தையை பிடிக்க, மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று கூண்டுகள் காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டது. மாசானகுடி சிறப்பு குழுவினர் தெர்மல் ட்ரோன் கேமராவால் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.இந்நிலையில், நேற்று காலை ரயில்வே கூட்ஸ் யார்டு பிளாட்பாரத்தில், ஆடு ஒன்று தலை, முன் கால்கள் மட்டும் எஞ்சிய நிலையில் இறந்து கிடந்தது. வனத்துறை, போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஏற்கெனவே பன்றி மற்றும் ஆட்டை கடித்து தின்ற சிறுத்தை, மீண்டும் ஒரு ஆட்டை கொன்றது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து, சென்னை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் தலைமையிலான குழுவினர், மயிலாடுதுறையில் முகாமிட்டு எட்டு வேட்டை மற்றும் மோப்ப நாய்களுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.மேலும், கடந்த 3ம் தேதி இரவு மயிலாடுதுறையில் சிறுத்தை இடம் பெயர்ந்த கேமரா பதிவு படத்தை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sethu
ஏப் 07, 2024 15:01

கோபாலபுரம் சி ஐ டி நகர் போகவேண்டிய சிறுத்தை பொது மக்களை அலைக்கழித்து வருகிறது , ஒரு தயிர் வடை வைத்து வனத்துறை வேண்டுதல் செய்யணும்


அப்புசாமி
ஏப் 07, 2024 10:25

முந்தா நாள் அந்த சிறுத்தையின் படம் சிக்கியதுன்னு மெடல் குத்திக்குட்டு டீ.வி ல காட்டுனாங்க.


Palanisamy Sekar
ஏப் 07, 2024 06:30

சிறுத்தைகளை விரட்டிவிடுவார்கள் சிதம்பரத்தில் என்று உறுதியான தகவல்கள் வந்துகொண்டுள்ள நிலையில் மயிலாடுதுறையில் எப்படி? எப்படியோ எங்கிருந்தாலும் சிறுத்தைகளை விரட்டி மக்களை பாதுகாப்பது நமது கடமையும் கூட


Kasimani Baskaran
ஏப் 07, 2024 05:58

ஒரு காலத்தில் மயில்கள் ஆடியதால் மயிலாடுதுறை இப்பொழுது சிறுத்தையாடுதுறையா அல்லது இன்னும் மயிலாடுதுறையா?


aaruthirumalai
ஏப் 07, 2024 05:15

காட்டை எல்லாம் ஆட்டைய போட்டா நாங்க என்ன செய்வோம்.


aaruthirumalai
ஏப் 07, 2024 05:15

காட்டை எல்லாம் ஆட்டைய போட்டா நாங்க என்ன செய்வோம்.


aaruthirumalai
ஏப் 07, 2024 05:15

காட்டை எல்லாம் ஆட்டைய போட்டா நாங்க என்ன செய்வோம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி