உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்வளத்துறையில் ஒப்பந்தப் பணிகள் சொந்தங்களுக்கே

நீர்வளத்துறையில் ஒப்பந்தப் பணிகள் சொந்தங்களுக்கே

சென்னை: இந்திய தணிக்கை துறை தலைவரின், 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறைகளில், ஒப்பந்தப் பணிகளுக்காக கோரப்பட்ட டெண்டர்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களே பங்கேற்றுள்ளதும், அவர்களுக்கே அப்பணிகள் வழங்கப்பட்டுள்ளதும் அம்பலமாகி உள்ளது.சட்டசபையில் நேற்று இந்திய தணிக்கை துறை தலைவரின், 2023ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:ஒப்பந்ததாரர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போது, ஒரு ஒப்பந்ததாரர் மற்றொரு ஒப்பந்ததாரர் மீது தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதால், ஒப்பந்தப் புள்ளிகளில் முறைகேடு செய்ய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

கணவன் - மனைவி

குறிப்பாக, 35 டெண்டர்களை மாதிரியாக தேர்வு செய்து ஆராய்ந்ததில், குடும்ப உறுப்பினர்களாக உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, அந்த பணிகள் தரப்பட்டிருப்பது தெரிகிறது.அதில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 27 டெண்டர்களிலும், நீர்வளத்துறை சேலம் நிர்வாக பொறியாளர் ஆறு டெண்டர்களிலும், சேலம் ஊரக வளர்ச்சி முகமை நபார்டு மற்றும் கிராமப்புற சாலை வட்டத்தில் தலா ஒரு டெண்டரும் இடம் பெற்றுள்ளன.சேலம் நீர்வளத்துறை நிலத்தடி நீர் பிரிவு, தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் உலக வங்கி உதவியுடன் ஆறு டெண்டர்களை வெளியிட்டது. அதில், டெண்டர் விதிமுறைகளை மீறியும், என்.ஐ.டி., மற்றும் உலக வங்கி கொள்கையை மீறியும், குடும்ப உறுப்பினர்களை கொண்ட இரு ஒப்பந்ததாரர்களுக்கே பணிகள் தரப்பட்டுள்ளன, ஒரு டெண்டரில் தந்தை, மகன் பங்கேற்று பணி எடுத்துள்ளனர்.ஐந்து டெண்டர்களில் கணவன், மனைவி சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.இரு ஒப்பந்ததாரர்கள், மல்லையன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் எம்.துரைசாமி ஆகியோர், ஒரே முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணுடன், டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளனர்.இந்த ஒப்பந்ததாரர்கள், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெளியிட்ட 27 டெண்டர்களிலும் பங்கேற்றனர். அனைத்து டெண்டர்களிலும், மல்லையன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம், 'எல் 1' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், மல்லையன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஜெயகுமார், எம்.துரைசாமியின் மகன் என்பது தெரியவந்தது. 27 டெண்டர்களுக்கான ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் போது, ஒப்பந்ததாரர்கள் இருவரும், எம்.துரைசாமியின் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றினர்.

பிழையானது

அதில், 26 டெண்டர்களில், 20ல் ஒரே ஐ.பி., முகவரியில் இருந்து ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கண்ட டெண்டர்களில் கூட்டு ஏல செயல்முறை நடந்ததாக தணிக்கையில் தெரியவந்தது.இதுபற்றி எடுத்து சொன்னதும், தணிக்கை துறையால் சுட்டிக்காட்டப்பட்ட இனங்களில் தொழில்நுட்ப மதிப்பீடு பிழையானது என்று ஏற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை கூறியது.ஒரு தனி நபரோ அல்லது தனிப்பட்ட நிறுவனமோ, ஒரே பணிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டெண்டர்களை சமர்ப்பிக்கும் போது, அந்த ஒப்பந்ததாரருக்கு இத்தனை நபருடனோ அல்லது நிறுவனத்துடனோ தொடர்பு இருக்குமானால், ஒப்பந்ததாரர் தகுதியிழப்புக்கு பரிசீலிக்கப்படுவார் என்பது விதி.

ஏற்கத்தக்கதல்ல

நபார்டு மற்றும் ஊரக சாலை வட்டம், சேலம் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்துவதற்காக, மூன்று பணிக்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டன.இரு ஒப்பந்ததாரர்கள், அதாவது பி.ரெயின் கட்டுமான நிறுவனம் மற்றும் பி.ரெயின் ஆகியோர் டெண்டரில் பங்கேற்றனர். பி.ரெயின் கட்டுமான நிறுவனத்திற்கு, 5.70 கோடி ரூபாய் மதிப்பில், 2020 ஆகஸ்டில் பணி வழங்கப்பட்டது.இணையதளத்தில் பதிவேற்றிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், இந்த டெண்டரில் பங்கேற்ற இரு ஒப்பந்ததாரர்களுமே தந்தை, மகன் என்பது தெரியவந்தது. மேலே குறிப்பிட்ட டெண்டரில், ஒப்பந்ததாரர்கள் இருவரும் தனித்தனியே விண்ணப்பித்துள்ளதாக, துறை பதில் அளித்தது.டெண்டர்களை இறுதி செய்யும் போது, விதிகளை கவனத்தில் கொள்ளாதததால், துறையின் பதில் ஏற்கத்தக்கதல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

enkeyem
ஜூன் 30, 2024 10:45

எத்தனை வாசகர்கள் சுட்டிக்காட்டினாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு தி மு க வுக்கு முட்டுக்கு கொடுக்கவும் மோடியை தூற்றவும் மட்டும் தெரிகிறது. தமிழை பிழையில்லாமல் எழுத மட்டும் தெரியாது.


S. Narayanan
ஜூன் 30, 2024 10:14

கணவன் கொள்ளை மனைவி கொள்ளை மகன் கொள்ளை ஜோஇன்ட் ஜொய்ன்ட் கொள்ளை அப்பப்பா இன்னும் இன்னும் எத்தனை கொல்லையோ. தலை சுத்துதே.


Sampath Kumar
ஜூன் 30, 2024 09:42

இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் இதே ஒன்னு இருக்கு நம்ம ஜி ஆட்சில அதனை என்பவற்கு மட்டுமே அணைத்து காந்தாரக்ட்டும் கொடுக்கும் அதி சூட்சும முறை பற்றி தெரிந்தால் இந்த மாதிரி செய்தக்கால் எல்லாம் வராது


Svs Yaadum oore
ஜூன் 30, 2024 10:01

அந்த ஜீ எல்லாம் வடக்கன் மாநிலத்தில்... தமிழ் நாடு படித்து முன்னேறிய ராமசாமி மண் இது. இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் இது.. இங்குள்ள ஜீ களை மிஞ்ச வடக்கனால் முடியாது ....


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 11:09

கமலஹாசன் வாசம் அடிக்கிறது. புரிந்து உருட்டவும்.


Arul Narayanan
ஜூன் 30, 2024 12:24

நேற்றைய செய்தி படிக்கவில்லையா? ஹைதராபாத்தில் மின் கட்டணம் வசூலிக்க அதானி நிறுவனத்தை தெலங்கானா காங்கிரஸ் அரசு நியமித்து இருக்கிறது.


duruvasar
ஜூன் 30, 2024 09:12

இப்ப வுட்டா இனி எப்பவும் இல்லை என ஒரு கொள்கை பிடிப்புடன் நடப்பதுதான் திராவிட மாடல் அரசு. ஆகவே இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


tmranganathan
ஜூன் 30, 2024 07:43

இந்த திராவிட கட்சிகள் கொள்ளைக்கார வம்சத்தினர். அதனால் தான் முதல் குடும்பத்து மாப்பிள்ளை இருபதாயிரம் கோடிகள் சம்பாதித்து உள்ளன. கள்ளக்குறிச்சி இறந்த குடும்பம் பற்றி முதல்வனுக்கு என்ன கவலை?


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 07:06

கள்ளத்தனம் செய்வதில் கைதேர்ந்தவர்கள் திராவிடர்கள். ஆனால் அதற்க்கு நேர்மாறாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று உருட்டுவார்களேயன்றி நேர்மை பற்றி சொல்லவே மாட்டார்கள். தீம்க்கா ஆளும் பொழுது பங்காளி கட்சி பங்கை வாங்கிக்கொண்டு கப் சிப் என்று இருக்கும். ஆதீம்க்கா ஆட்சிக்கு வாழ்ந்தால் தீம்க்கா பங்கை வாங்கிக்கொண்டு கப் சிப் என்று இருக்கும். இந்த அறிக்கையை வைத்து உச்சநீதிமன்றத்தில் குறைந்தபட்சம் ஒரு டஜன் வழக்குக்களாவது போடலாம். அண்ணாமலை படிக்கப் போனார் என்றால் திராவிட பாஜகவினர் கூட வாயை மூடிக் கொள்வார்கள். தமிழனின் தலையெழுத்து திராவிடனை கட்டி அழவேண்டும் என்பதுதான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி அப்பொழுதே புரிந்திருக்கிறது.. ஆனால் திராவிடனுக்கு அடிமை. நீ பாவமடா தமிழா


Svs Yaadum oore
ஜூன் 30, 2024 06:25

ஐந்து டெண்டர்களில் கணவன், மனைவி சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டனவாம் ...ஒரு டெண்டரில் தந்தை, மகன் பங்கேற்று பணி எடுத்துள்ளனர்....26 டெண்டர்களில், 20ல் ஒரே ஐ.பி., முகவரியில் இருந்து ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது......சமூக நீதி மத சார்பின்மையாக திராவிட மாடல் குடும்ப கொள்ளை கூட்டத்திற்கே அணைத்து டெண்டர்களும் வாரி வழங்கப்படும் ....எவன் அப்பன் வீட்டு பணம் ......


Svs Yaadum oore
ஜூன் 30, 2024 06:21

கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கே மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் புகுந்தது.இந்த நூலகத்தில் மழைநீர் ஒழுகியதால் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும் ரேக்குகள் நனைந்து துருப்பிடித்தன. அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியிலும் மழை தண்ணீர் புகுந்தது.மழையால் கம்யூட்டர் சர்வர் அறையும் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது...சொந்தகளுக்கே ஒப்பந்த பணி .....எல்லாம் கொள்ளை ...இதுதான் திராவிட மாடல் லட்சணம் ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை