உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குன்னூர் வாலிபர் குண்டாசில் கைது

குன்னூர் வாலிபர் குண்டாசில் கைது

ஊட்டி;குன்னூரில் கஞ்சா விற்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நீலகிரியி கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குன்னூர் காட்டேரி பிரிவு பகுதியில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வெலிங்டன் பகுதியை சேர்ந்த இமானுவேல் பெலிக்ஸ், சுகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குன்னூரில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இமானுவேல் பெலிக்ஸ் இதற்கு முன்னர் வெலிங்டன் போலீஸ் ஸ்டேஷன் முன்பே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்றதாக 6 வழக்குகள் உள்ளது. இமானுவேல் பெலிக்சை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நீலகிரி எஸ்.பி. சுந்தர வடிவேல் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். தொடர்ந்து கலெக்டர் அருணா, இமானுவேல் பெலிக்சை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள இமானுவேல் பெலிக்சிடம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SVK SIMHAN
ஜூன் 26, 2024 20:35

கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் சமூக குற்றவாளிகள் யாவருக்கும் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருந்தால் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் ?????? நாட்டின் சட்ட ஒழுங்கு நீதித்துறை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க, மக்கள் உணர்வோமாக.??????????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை