உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளம் பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சியில் ரோடு பணி ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் 1.59 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பகுதியில் ரோடு அமைக்க 'டெண்டர்' எடுத்தார். பணிகள் முடிந்ததால், 'பில்' தொகையை வழங்க, ஒப்புதல் தர பொறியாளர் சுரேஷ்குமாரை அணுகினார்.இதற்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்குமார் கேட்டார். அதில் ஒரு லட்சம் ரூபாயை கந்தசாமி கொடுத்து விட்டார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என சுரேஷ்குமார் வலியுறுத்தினார்.திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, நேற்று மாலை, ராயபுரத்தில் உள்ள அலுவலகத்தில் கந்தசாமி, சுரேஷ்குமாரிடம் கொடுத்தார்.மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Raj
ஆக 27, 2024 06:44

எங்கும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இந்த ஆட்சியில். பதிவுத்துறையில் திருமண பதிவிற்கு 6000 அழவேண்டியதாயிற்று. பட்டா தடையின்றி கிடைக்கும் என்றார்கள். ஆனால் தலா 8000, 5000 என கொடுத்தேன். வீடு பதிவிற்கு 20000. இதெல்லாம் 30000 கோடியில் சங்கமம்.


Swamimalai Siva
ஆக 24, 2024 19:42

லஞ்சம் வாங்குவது விட லஞ்சம் கொடுப்பது மிக கொடுமையான குற்றமாக கருதவேண்டும். கொடுப்பவர் இருப்பதிகள் தானே வாங்குகின்றார்கள். கொடுக்க முடியாது என்றால் என்ன செய்வார்கள்.


R.RAMACHANDRAN
ஆக 24, 2024 07:43

முதலில் கொடுத்த 1 லட்ச ரூபாய் லஞ்சத்திற்கு ஒப்பந்ததாரர் மீதும் வழக்கு தொடர்ந்து அவர் செய்த வேலைகளின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 07:29

சுரேஷ்குமார் எந்த கான்டராக்டரை அணுகுவார்?


சமீபத்திய செய்தி