மேலும் செய்திகள்
பொருநை தமிழரின் பெருமை; வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 1
மதுரை:பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து யூடியூப் சேனலில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கரை, மே 4ல் கைது செய்து, குண்டர் சட்டத்திலும் சிறையில் தள்ளினர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ேஹாட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கில், மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மே 22ல் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை சிறையிலிருந்தவாறு காணொலி காட்சியால் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் நேற்று சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 19 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
2 hour(s) ago | 1