மேலும் செய்திகள்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு; முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 1
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
12 hour(s) ago | 1
4 மாவட்டங்களில் இன்று கனமழை
15 hour(s) ago | 1
சென்னை : ரியல் எஸ்டேட் அதிகாரிகளின் அலட்சியத்தால், வீடு, மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் பணிகள் முடங்கிஉள்ளன. தமிழகத்தில் வீடு, மனை விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், 2017ல் ஏற்படுத்தப்பட்டது.மத்திய அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, 8 அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள், மனைகள் அடங்கிய திட்டங்களை பதிவு செய்வது கட்டாயம். தாமதம்
புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் துறைகள், அது குறித்த விபரங்களை இந்த ஆணையத்துக்கு அனுப்புகின்றன.இருப்பினும், திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் முறையான விண்ணப்பத்தை, பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, பதிவு செய்ய, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் உள்ளனர். இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: தமிழக ரியல் எஸ்டேட் ஆணையத்தில், போதிய பணியாளர்கள் இல்லை. அரசு ஒப்புதல் அளித்த பல்வேறு பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டு உள்ளன. நடப்பு ஆண்டில், இதுவரை, 86 குடியிருப்பு திட்டங்கள், 665 மனைப்பிரிவு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவோர், விண்ணப்பங்களை அளித்தால், அதை ஆய்வு செய்வது, பதிவு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பெரும்பாலான திட்டங்களின் பதிவு விஷயத்தில், முடிவு எடுப்பதில் அதிகபட்ச தாமதம் ஏற்படுகிறது.முக்கியத்துவம்
பிரபலமான கட்டுமான நிறுவனங்கள் பெயரில் வரும் விண்ணப்பங்களுக்கு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, சில நிறுவனங்களின் விண்ணப்பத்தில், நகர், ஊரமைப்பு துறை ஒப்புதல், உள்ளாட்சி அமைப்பு ஒப்புதல் தொடர்பான ஆவணங்கள் இன்றி பதிவு செய்யப்படுகின்றன. இதனால், இப்பதிவை நம்பி வீடு, மனை வாங்குவோர் பிரச்னையில் சிக்கும் நிலை ஏற்படும். எனவே. குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 1
12 hour(s) ago | 1
15 hour(s) ago | 1