உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு வயதை 62 ஆக்க தினகரன் எதிர்ப்பு

ஓய்வு வயதை 62 ஆக்க தினகரன் எதிர்ப்பு

சென்னை:அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 60ல் இருந்து 62 ஆக உயர்த்த பரிசீலனை செய்வதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அரசு ஊழியர்களில், 40 சதவீதம் பேர், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்கான நிதி இல்லாததால், தி.மு.க., அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக, அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அரசு பணியை எதிர்நோக்கி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை, 80 லட்சத்தை கடந்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்முடிவை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thanjavur K. Mani Iyer
ஆக 07, 2024 09:07

திரு. தினகரனின் கருத்தை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன். அதற்கு ஒரூ சில காரணங்கள் உண்டு. அதாவது, ஓய்வு வயதை 60லிருந்து 62டாக உயர்த்தினால், பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கும் பணியாளருக்கு உடைய வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். அதுவும் கீழ் இருக்கும் பணியாளர் வயதில் முதிர்ந்தவராக இருந்தால். அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெற்றுவிடுவார். அதனால் ஏற்படும் நன்மை/ஆதாயங்கள் கடைசிகாலத்தில் அனுபவிக்கமுடியாமல் போய்விடும். ஆகையால், அரசாங்கத்தின் கஜானாவில் பணம் இல்லை என்றால் அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்யவேண்டுமே தவிர இந்த்மாதிரி யோசனையை அரசாங்கம்கை விடவேண்டும்.


R.RAMACHANDRAN
ஆக 07, 2024 08:41

60 வயதிற்கு மேற்பட்டவர்களை பணியில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் சம்பளம் புதிதாக பணியில் சேரும் இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.மேலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் லஞ்ச ஊழலில் துணிந்து ஈடுபடுகின்றனர் என்பதால் இளைஞ்சர்களை பணிகளில் சேர்ப்பதால் சில காலத்திற்கு லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் குற்றங்கள் குறையும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை