| ADDED : மே 04, 2024 12:49 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனுார் சுக்கிரன் கோவிலில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், அவரது மனைவி அனுராதா சிறப்பு வழிபாடு செய்தனர். தினகரன் கூறியதாவது:மோடி மீண்டும் பிரதமராவார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களாகிய, நான் உட்பட பெரும்பாலானோர் வெற்றி பெறுவோம்.பழனிசாமி என்ற தீயவர் ஒருவர் இருக்கும் வரை அ.தி.மு.க.,வில் எந்த நல்லதும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. வரும், 2026 தேர்தலில் நல்லாட்சியை மையப்படுத்தி காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி அமையும்.கர்நாடகாவில் ஆட்டம் போடும் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரிடம் ஜனநாயக முறைப்படி காவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதாரண பிரச்னை. காவிரி நீர் தமிழக மக்களின் உரிமை. காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என, சோனியா ஒரு அறிவிப்பு சொன்னாலே எல்லாம் நடந்து விடும்.தமிழகத்தில் எப்போதெல்லாம், தி.மு.க., ஆட்சி வருகிறதோ, அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. தி.மு.க., ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை.மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் குடிநீருக்கும், பயிர்களுக்கு பம்ப் செட் இயக்கி தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு ள்ளனர்.அறநிலைத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு நல்ல பக்திமான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர். முன்னர் அ.தி.மு.க., இயக்கத்தை சேர்ந்தவர். அதனால், அவர் சிறப்பாக செயல்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.