உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.டி.,க்கு எதிரான அனிதா ராதாகிருஷ்ணன் மனு தள்ளுபடி

ஈ.டி.,க்கு எதிரான அனிதா ராதாகிருஷ்ணன் மனு தள்ளுபடி

சென்னை: அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2002-2006ல் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சரக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அமைச்சரின் சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சரின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனையடுத்து அமைச்சரின் மனுவை ஐகோர்ட் ரத்து தள்ளுபடி செய்தது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R KUMAR
ஆக 07, 2024 21:09

கவலையே வேண்டாம், இப்போதுதானே பதினெட்டு ஆண்டுகள் ஆகியுள்ளது, இன்னும் இருபது ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் இதைவிட அதிக சொத்துக்கள் ஈர்த்துவிடலாம்


ஆரூர் ரங்
ஆக 07, 2024 20:48

அனிதா விவகாரங்களை வைத்து திமுக மீண்டும் அரசியல் செய்யும்.


N.Purushothaman
ஆக 07, 2024 20:32

இது சமூக நீதிக்கு எதிரானது ....திருட்டு திராவிடர்களின் கொள்கையே கொள்ளையடிப்பது லஞ்சம் ஊழல் செய்வது தானே ....நீதிமன்றம் தங்களின் வரம்பு மீறி செய்லபடுதுன்னு முரசொலியில் தலையங்கம் எழுத வேண்டிய சூழல் வந்துள்ளது ....


Ramesh Sargam
ஆக 07, 2024 20:08

மனுவை தள்ளுபடி செய்தது மகிழ்ச்சி. அவருக்கு என்ன தண்டனை? அதையும் கூறவும். வழக்கை துரிதமாக முடித்து தண்டனையை நிறைவேற்றவும்.


rajasekaran
ஆக 07, 2024 20:21

கவலை படாதே நண்பா. என்னிக்கோ ஒரு நாள் இந்த நூற்றாண்டு இல்லை விட்டாலும் அடுத்த நியூட்ராலிண்டாவது நிதி வெல்லும்.


vadivelu
ஆக 07, 2024 20:30

திராவிட கட்சிகளின் அமைச்சர்கள் யாருமே ஊழல்வாதிகள் இல்லை. இதுவரை இந்த கட்சிகளில் ஒருவர் கூட ஊழல் செய்தது இல்லை. பல லட்சங்களை செலவழித்து அவர்களில் இலர் பதவிக்கு வருவதே மக்களுக்கு நன்மை செய்யத்தான். நம்புங்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ