தி.மு.க., -- பா.ஜ., கார்ப்பரேட்கள்: : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:தி.மு.க., அரசு முதலாளித்துவ அரசாக, கார்ப்பரேட் அரசாக திகழ்கிறது. எத்தனையோ ஏழை, எளிய மாணவர்கள், திறமையானவர்கள் இருக்கின்றனர். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தி மாணவர்களுக்கு உதவலாம். முதலாளித்துவ அரசு என்பதால், பெரும் பணக்காரர்களுக்காக 'பார்முலா - 4' கார் பந்தயத்தை நடத்துகிறது.முதல்வர் மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளிநாடுக்கு சென்று உள்ளனர். அங்கு என்ன நடக்கிறது என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். அண்ணாமலைக்கு பதிலாக ஐந்து பேர் வந்துள்ளனர். யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழகத்தில் தி.மு.க., ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றால், பா.ஜ., அகில இந்திய கார்ப்பரேட் கம்பெனி.இவ்வாறு அவர் கூறினார்.