உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழைகளிடம் அதிகாரத்தை காட்டும் தி.மு.க., அரசு

ஏழைகளிடம் அதிகாரத்தை காட்டும் தி.மு.க., அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கொள்ளை அடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது 'எக்ஸ்' தள பதிவு:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும், காணொலி களும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.பூர்வகுடி மக்களின் உடைமைகளை துாக்கி எறிந்தும், கூரையை பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பலவந்தமாக வெளியேற்றி இருக்கின்றனர். மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது. வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் தி.மு.க., அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்கள்.இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Svs Yaadum oore
மே 11, 2024 12:21

பூர்வ குடி மக்களுக்கு என்ன பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அறிவித்து பின்பு அவர்களை அங்கிருந்து வெளியேற சொல்வது ??அப்படி அறிவிப்புக்கு முன் பூர்வ குடி மக்கள் கதி என்ன என்று அரசு யோசித்ததா ?? அங்குள்ள மக்களை வெளியேற்றி பிறகு வனத்தை கொள்ளையடிக்கணும் அதுதான் காரணம் பழங்குடியினர் வனப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு அங்கேயே தோன்றி வசிப்பவர்கள் வனத்தை பாதுகாப்பதே அவர்கள்தான் இந்த மண் பழங்குடியினருக்கு சொந்தம் என்று பல முறை அறிவித்தது இப்போதைய காங்கிரஸ் பட்டத்து இளவரசர்தான்


Sampath Kumar
மே 11, 2024 12:00

அப்படி ஒரு ஆசாமி அந்த அலுவலகத்தில் வெள்ளி செய்யவில்லை என்று தெரிந்தும் நீ பொய் அறிக்கை விட்டு எப்படி பட்ட வேலையை பார்த்து உள்ளை இதுக்கு மக்களை ஆக பற்கிட்டர்கள்


S. Kalaiselvan
மே 11, 2024 11:10

போக்குவரத்து ஓய்வு பெற்றவர் மாண்புமிகு உச்சநீதி மன்றம், மாண்புமிகு உயர்நீதி மன்றம் நிலுவையில் உள்ள பஞ்சப்படி வழங்க உத்திரவு இட்டும் வழங்காத இந்த அரசு எதை மதிக்கும் இதுதான் அவர்கள் இயல்பு


Srinivasan Krishnamoorthi
மே 11, 2024 11:04

தவறாக சொல்கிறார் திமுகவை எதிர்க்கும் அனைவரையும் அதிகாரத்தால் அடக்க நினைக்கிறார்


MADHAVAN
மே 11, 2024 10:40

இங்கு நடக்கும் பிரச்னை என்னனு தெரியாம ஓணான் மாதிரி மூக்கை நுழைக்கும் சொல்கிறேன், உண்மை என்னனு தெரிந்து பேசுங்க உங்கள மாதரி புல்டோசர் விட்டு காலி பண்ணுனாங்களா? பலமுறை அவர்களுக்கு வேற இடம் பட்டவோட தயாராயிருக்கு, அங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி,


Duruvesan
மே 11, 2024 09:48

சூப்பர் மூர்க்ஸ், விடியல் சத்தம் இனிமே தான் கேட்கும்


அரவழகன்
மே 11, 2024 08:21

ஏழைகளிடம் இல்லை அதிகாரம் காட்டுது தி.மு.க


S. Balakrishnan
மே 11, 2024 07:41

அகில பாரத பாஜக தலைவரான திரு அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி அவலங்களை முன்னெடுத்து கண்டிக்க நேரம் இருக்கிறது என்பதை உணர்த்தி விட்டார். கோடையில் தவளை சப்தமிட்டால் மழை வருவதற்கு அறிகுறி. தமிழகத்திற்கு விடிவுகாலம் தொடங்கி விட்டது. அக்கிரமங்கள் இனி நடக்க அனுமதிக்க மாட்டோம்.


Svs Yaadum oore
மே 11, 2024 07:23

போலீஸ் பூர்வகுடி மக்களின் உடைமைகளை துாக்கி எறிந்தார்கள் குழந்தைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் இதுதான் மத சார்பின்மை சகோதரத்துவம் சமத்துவம் சமூக நீதி இந்த லட்சணத்தில் ஒருத்தன் கொடைக்கானல் இன்னொருத்தன் லண்டன் இதுபோல் இங்குள்ளவன் நன்றாக அடிவாங்கட்டும் இந்த விடியலுக்கு மத சார்பின்மையாக ஓட்டுபோடுபவன் திருந்தும் வரையில் நாடு இப்படித்தான் அராஜகம் , ரௌடிதனம், போதை கஞ்சா என்று சீரழியும்


Kasimani Baskaran
மே 11, 2024 07:07

மீடியாக்களை எலும்புத்துண்டு மூலம் கைக்கும் வைத்திருப்பர் மீறினால் சவுக்கருக்கு நடந்தது போல வேறு விதமாக நடந்து நாடகம் போடுவார்கள் காரை விட்டு மோத விடுவது போல தீம்கா என்பது ஒரு தரமற்ற நாடகத்தை அறங்கேற்ற மட்டுமே திரானியுள்ள ஒரு உபிஸும் அவர்களது எஜமானர்களும் நடத்திய கூட்டுறவுக்கட்சி இப்பொழுது குடும்பமே எஜமானர்கள் ஆனதால் பல இடியாப்பச் சிக்கல்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ