உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ராமதாசுக்கு தி.மு.க., நோட்டீஸ்

ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ராமதாசுக்கு தி.மு.க., நோட்டீஸ்

சென்னை: 'கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக, அவதுாறாக விமர்சித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணியிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் காலனியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூறிய குற்றச்சாட்டுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர், இருவரிடம் மான நஷ்டஈடாக, 1 கோடி ரூபாய் தர வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என, நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், தி.மு.க., மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:ராமதாஸ், அன்புமணி ஆகியோர், இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட, 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளிதழ் ஒரு பதிப்பின் வாயிலாகவும், தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் வேறு வகையில் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 25, 2024 10:02

ஏனுங்க நானும் இந்த வில்சர் அனுப்பின நோட்டிசை வரிக்கு வரி முக்கி முக்கி மூணு தடவை படிச்சுப் பார்த்தேனுங்க.இருபத்து நாலு மணி நேரத்துல மருந்து வேலை செய்யாட்டி என்ன பண்றதுன்னு எங்கேயும் சொல்லவே இல்லை. அப்பால சந்தேகமும் வந்துட்டுதுங்க. திமுக காரங்க மானம் போனதுக்கு நஷ்ட ஈடு ஒரு கோடி ரூவாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்தா அரசாங்கத்தோட மானம் திரும்பி வந்துடுமா இல்லே திமுக காரங்க மானம் திரும்பி வந்துடுமா? இல்லே அடுத்து சாராயம் குடிச்சு சாகப்போறவங்களுக்கு இப்போவே நிதி வசூலா?


sethu
ஜூன் 25, 2024 09:23

தைரியம் இல்லாத தமிழனை கொள்ளும்...


sethu
ஜூன் 25, 2024 09:21

திமுக வின் மதகுரு பி வில்சன் நிரந்தரமாக சி எஸ் ஐ ஆள் நியமிக்கப்பட்ட ஆஸ்தான கட்டப்பா. தமிழன் உசார் வந்தேறிகளுக்கு வந்தேறி மதமே துணை .


VENKATASUBRAMANIAN
ஜூன் 25, 2024 08:43

ஏற்கனவே அண்ணாமலைக்கு அனுப்பினீர்களே உங்கள் கூட்டாளிகள் வாங்கிவிட்டார்களா.


M Ramachandran
ஜூன் 25, 2024 13:05

சும்மா உதார் விடுவாங்க. இனோருத்தன். எதெற்கெடுத்தாலும் உள்ளேன் ஐயா என்று வருவானெ அவனுக்கு போட்டியா இந்த ஆளும் அவர்களுக்குள் இப்போ யுத்தம் நடக்கும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை