வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாஜகவில் மக்களை வசீகரிக்கும் வகையில் நல்ல பேச்சாளர்கள் இல்லை. இருந்தால் எதிர் மற்றும் உதிரி கட்சிகளின் தில்லாலங்கடி சவடால்களை சரியாக சமாளிக்க முடியும். ஒருத்தர் பேசும் போது என் உயிரினும் மேலான இனிய உடன் பிறப்புகளே அப்படின்னு அடித்தொண்டையில் கர்த்தர் குரலில் சொல்லும் போது பொது ஜனம் பத்து நிமிஷம் கைதட்டுவானுக. கூட்டத்தில் மாமனும் மச்சானும் பக்கத்தில் உட்கார்ந்து இதை கேட்டபோது மாமா இவருக்கு நீ உடன் பிறப்புன்னாக்கா அப்ப நான் அவருக்கு என்ன உறவு.சொல்லு மாமா அடேய் மச்சான் கம்முனு இரு.கடா கண்ணு போட்டிச்சின்னு சொன்னாக்கா ஆமாண்ணு சொல்லணும்டா. புரிஞ்சுக்கோ.
இனி வாக்கு சாவடி தேவை இல்லை தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு ஒன் டைம் பாஸ் WORD பரம ரகசியமாக கொடுக்க வேண்டும்.அதை வைத்து வாக்காளர்கள் ஆன் லைனில் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.இப்ப எல்லாம் போண்டா சமுசா வாங்கி சாப்டறவனுங்க கூட ஆன் லைனில் துட்ட குடுக்கறானுவ.
குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.பட்டும் படாமலும் சொல்லக்கூடாது.
யோக்யன் வந்துட்டன் சொம்ப தூக்கி உள்ளே வை.
தேர்தல் நேரத்தில் மின் அணு வாக்கு பெட்டி பக்கத்திலேயே வாய் ஜாலாக்கு கட்சி தொண்டர்கள் ஒரு மூணு நாலு பேர் சேர்களில் அமர்ந்தபடி வாக்கு போட வரும் வாக்காளர்களை மிகவும் பாசமுடன் பார்த்து ஜாடை காட்டி கைகளை காலங்காத்தால தெரிவதை போல் கை விரல்களை விரித்து காட்டுவது ஏன்.இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதே இல்லை
திருடன் ... .திருடன் .... புடி .... புடி .... தா பாரு .... ஓடுறான் ... என்று திருடனே கத்திக்கொண்டு ஓடினால் அவனை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் ....
ஒருவர் வாக்காளர் பெயர் சேர்க்க முனிசிபல், தாசில்தார், மத்திய அரசு ஆதார், வருமான வரி எண் போன்ற மூன்றும் இருக்க வேண்டும். உறுதி மொழி மட்டும் வாங்கி சேர்ப்பர். பல ஆண்டுகளாக வாக்காளர் பெயர் சேர்ப்பு, மறுப்பு எல்லாம் திராவிட தேர்தல் ஆணையம் கையில். தமிழக தேர்தல் ஆணையம் தலைமை செயலாளர் போல் சொல்வதை கேட்க வேண்டும்? வேட்பாளர் நாட்டில் எங்கும் போட்டியிடலாம். வாக்காளர் குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் தான் வாக்களிக்க முடியும். ஏன்? தேர்தல் அறிவிப்புக்கு பின், வாக்காளர் விரும்பும் தொகுதி தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை.? இதற்கு திமுக மனு கொடுக்குமா?
ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும் ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன எனவே ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் வாக்குரிமை வழங்க வேண்டும்
பிள்ளையயும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டபார்க்கும் ஆரஸ்பாரதியே - கோவை போன்ற தொகுதிகளில் உங்க MPய resign பண்ண செய்து சரியான வாக்காளர் பட்டியலுடன் re-election கேட்க முடியுமா??
ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவை வைத்து போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவேண்டும்.