உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்

கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்

மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி நெல் கொள்முதல் மையத்தில் கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அப்பகுதி தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஒருவர் ஐந்து நாட்கள் அலைக்கழித்ததாக ம.தி.மு.க., ஒன்றிய செயலாளரும் விவசாயியுமான மணவாளக்கண்ணன் கண்ணீருடன் கலெக்டர் சங்கீதாவிடம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் அளித்தார். பேச முடியாமல் தேம்பி அழுததால் சக விவசாயிகள் தண்ணீர் கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர்.கூட்டத்தில் அவர் பேசியதாவது: செல்லம்பட்டியில் 'அவர்' (சுதாகரன்) தி.மு.க., ஒன்றிய செயலாளர். அங்கு எல்லா நிர்வாகிகளுக்கும் காசு கொடுத்தால் தான் நெல் மூடைகளை நெல் கொள்முதல் மையத்தில் எடைபோட அனுமதிக்க முடியும் என கட்டாயப்படுத்துகிறார். எனது நெல் மூடைகளை 5 நாட்கள் எடைபோடாமல் நிறுத்தி வைத்து என்னை அலைக்கழித்தார். விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் பரிதவிக்கிறோம். 40 கிலோ மூடைக்கு ரூ.70 கமிஷன் கேட்கின்றனர். மாநில அரசு சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூடைக்கு ரூ.10 தருகிறது.அதுபோக விவசாயிகளும் ஒரு மூடைக்கு ரூ.25, அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு ரூ.25, உள்ளூர் பிரமுகர்களுக்கு ரூ.20 கொடுத்தால் நெல் கொள்முதல் மையமே செயல்படும். இல்லாவிட்டால் மையத்தை நடத்தவிட மாட்டார்.மூன்றாண்டுகளாக இப்படித்தான் இருந்தது என்றாலும் இந்த முறை எல்லை தாண்டி செயல்படுகின்றனர். எல்லோரின் ஆதரவுடன் தான் கமிஷன் வசூலிக்கின்றனர். யாரிடமும் பேசி ஒரு பயனும் இல்லை. நேற்று 17 மையங்கள் திறந்துள்ளனர்.செல்லம்பட்டி பகுதியில் 95 சதவீத அளவுக்கு நெல் அறுவடை முடிந்து விட்டது. ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக 17 மையங்களை எதற்காக திறக்க வேண்டும். இப்போது மையத்தை திறந்தால் வெளியூர் வியாபாரிகள் தான் நெல்லை விற்று லாபம் பார்ப்பார்கள்.விவசாயிகளுக்கு இங்கே வேலையில்லை, வியாபாரிகளுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். செல்லம்பட்டியில் 5 சதவீத நெல் கூட அறுவடைக்கு இல்லை. இன்னும் 50 மையங்கள் செயல்படுகிறது. கலெக்டர் சங்கீதாவிடமும் தெரிவித்தேன். யாரிடமும் சொன்னாலும் நெல்லை எடை போட விடமாட்டேன் என்றார் தி.மு.க., ஒன்றிய செயலாளர். அவருக்கு பணம் கொடுத்த பின் (இன்னொருவர் மூலம்) தான் எடை போட அனுமதித்தனர். விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.65 முதல் ரூ.80 வரை வசூலிக்கின்றனர்.எங்கள் தலைமையிடம் (ம.தி.மு.க.,) தெரிவித்துவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது.இவ்வாறு பேசினார்.கலெக்டர் சங்கீதாவிடம் ஆதங்கத்தை தெரிவித்த போது தேம்பி அழுத மணவாளக்கண்ணன், வெளியே வந்து அழுது கொண்டே இருந்தார். பத்திரிகையாளர்கள் சமாதானப்படுத்திய போது, உள்ளே பேசியதையே மீண்டும் பேட்டியாக தேம்பிக் கொண்டே கூறினார்.

வீண் பழி சுமத்துகிறார்

தி.மு.க., செல்லம்பட்டி (வடக்கு) ஒன்றிய செயலாளர் சுதாகரன் கூறியதாவது: 2019 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க., போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அப்போது ம.தி.மு.க., ஒன்றிய செயலாளரான மணவாளக்கண்ணன் அக்கட்சி கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் ஓட்டை பிரித்ததால் தி.மு.க., கவுன்சிலர் தோல்லியுற்றார். அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அந்த வெற்றியால் யூனியன் சேர்மன் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. அப்போது முதல் எது நடந்தாலும் எங்கள் (தி.மு.க.,) மீது குற்றம் சொல்லிக்கொண்டு திரிகிறார். அவரது செயல்பாடுகள் குறித்து ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதனிடமும் தெரிவித்துவிட்டோம். இதன் தொடர்ச்சியாக தான் கலெக்டர் முன்னிலையில் என்னை குற்றம்சாட்டியுள்ளார். அதில் உண்மையில்லை. நெல் கொள்முதல் மைய விஷயங்களில் நான் தலையிடவில்லை. நான் அவரை அடிக்க வந்ததாக தெரிவித்துள்ளது என் மீது வீண் பழி சுமத்தும் வகையில் முன் விரோதத்தில் கூறியுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

pv,முத்தூர்
பிப் 22, 2025 14:22

துனைமுதல்வர் மகனுக்காக, தன் நாற்காளிளை துறந்தவரிம் திமுகா மீது நடவடிக்கையை எதிர்பார்பது கடினம்


GMM
பிப் 22, 2025 13:09

அரசியல் பின் புலம் இருந்தும் திமுகவை கமிசன் இல்லாமல் அசைக்க முடியவில்லை. சாதாரண மக்கள் நிலை. சர்வ கட்சியும் கூட்டு. தமிழக அரசு அலுவலகம், கோர்ட், போலீஸ் நிலையம் எங்கும் நியாயம் கேட்டு செல்ல முடியவில்லை?. உங்களை விட பன்மடங்கு இழந்து நிற்பவர்கள் ஏராளம் . பிரிட்டிஷ் வழக்கு, புகார் அனுபவம் பெற்று விதியை உருவாக்கியது. குற்றம் குறைந்தது . பிஜேபி யும் அனுபவம் சேகரித்து விவசாய மசோதா கொண்டு வந்தது. மசோதா தடுக்கப்பட்டது. ஊழலை வளர்க்க ஒரு கூட்டம் போராடி வென்றது. தமிழக நிர்வாகம், திமுக கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளது. கலெக்டர் ஒன்றும் சுயமாக முடிவு எடுக்க முடியாது.?


A M Palanisamy
பிப் 22, 2025 12:53

மூடை என்பது பேச்சு வழக்கில் உபயோகப்படுவது. மூட்டை என்பதே சரியான சொல் .


Apposthalan samlin
பிப் 22, 2025 11:29

உண்மை தெரிந்தால் கருத்து போடுங்கள் இல்லை என்றால் ஆண்டவன் கண்ணை குத்திரும்


நாஞ்சில் நாடோடி
பிப் 22, 2025 10:57

மாடல் ஆட்சி...


சண்முகம்
பிப் 22, 2025 10:23

மூடையா மூட்டையா? எது சரி? நெல்லை மக்கா மட்டுமே அறிவர் :-)


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 22, 2025 10:18

ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணவாளக்கண்ணன் என்பவரும் திமுக கட்சிக்காரர்தான். கலெக்டர் சங்கீதா அம்மையாரும் நாலாம் கலைஞரின் நட்புக்காக நாற்காலியையே துறந்த கட்சிப் பற்றாளர். இந்த நிலையில் கட்சி ஒன்றிய செயலாளர் பற்றி பற்றாளரிடம் புகார் கொடுத்ததாக வரும் செய்தியும் எதிர்பார்க்கும் விடையும் என்னவாகும்? அருகாமையில் இருக்கும் குப்பைத்தொட்டிக்கே


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
பிப் 22, 2025 10:10

திராவிட மாடலில் நெல் திருடாமல் கமிஷன் தானே கேட்கிறார்கள்.


HoneyBee
பிப் 22, 2025 10:07

கலெக்டர் மற்றும் அங்கு உள்ள விவசாயிகளுக்கு உண்மை தெரியும். திராவிட மாடல் பொய்யா சொல்லி ஸ்டிக்கர் ஒட்டும் கூட்டம்


Venkateswaran Rajaram
பிப் 22, 2025 09:59

இந்த விவசாயி ம தி மு கவாம் ....கொள்ளைக்கார கூட்டணி கட்சி ....திருடர்கள் கூட்டணி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை