உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவின் வெற்றி நிரந்தரம் அல்ல : அண்ணாமலை

திமுகவின் வெற்றி நிரந்தரம் அல்ல : அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல.வரும் சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் பா.ஜ.,வெற்றி பெறும் என தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: கூட்டணிக்குள் ஈகோவிற்கு இடமில்லை. விக்கிரவாண்டி தொகுதி இடை தேர்தலில் பா.மக போட்டியிட வேண்டும் என கூட்டணியில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. பாமக நின்றாலும் பாஜ. கடுமையாக பாடுபடும்.திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல.வரும் சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் பா.ஜ.,வெற்றி பெறும்.திமுகவில் 39 எம்.பிக்கள் இருந்தாலும் தமிழக பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துசொல்லும் ஒரே எம்.பி.,யாக எல். முருகன் உள்ளார். பிரதமர் தமிழகத்திற்கு எப்போது வருவார் என்பது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பல கேபினட் அமைச்சர்கள் இருந்தாலும் அந்த மாநிலத்திற்கு கிடைத்திருக்கும் நிதியை விட தமிழகத்திற்கு அதிக நிதி கிடைத்திருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

Selvin Christopher
ஜூன் 17, 2024 20:43

உனக்கு ஏனப்பா பைதியம், மாசம் 8 லட்சமா ஓசியா வருத்து நீயும் காமராஜரும் ஒன்னா .


Ramesh A
ஜூன் 16, 2024 20:35

தோல்வி மட்டும் நிரந்தரம்


Durai
ஜூன் 16, 2024 16:22

நீங்கள் ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் இப்படித்தான் அறிக்கை விட்டுகொண்டிருக்கவேண்டும். ஆனால் மக்கள் ஏமாரமாட்டார்கள், அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்


Natesan Narayanan
ஜூன் 16, 2024 15:33

அண்ணாமலை அப்படி சொல்லவில்லையே . தங்கள் குறைகள் அனைத்தையும் பி ஜே பி என்ன என்ன செய்யவேண்டும் , இது வரை செய்த செயல் , யாது தவறு பட்டியல் இடுங்கள் . தவுகளை மாற்றிக்கொள்ள தயார் .


Lakshminarasimhan
ஜூன் 18, 2024 20:20

நீங்க மனுஷனா இருப்பது தவறு


Asagh busagh
ஜூன் 16, 2024 13:50

எந்த ஒரு விஷன் இல்லை. நாட்டை வழிநடத்த திசை இல்லை, பிச்சுகிட்டு கூட்டணி நாறா டர்ராகிடும்கிற பயத்தில் பிரதமர் வேட்பாளர் கூட இல்லை. இவ்வளவு ஏன்? நல்லா யோசித்து சொந்தமா பெயர் வைக்க தெரியாம நாட்டின் பெயரையே சுட்ட கூட்டணி. இந்த பிறவி திருடனுங்களுக்கு பெரும்பாலான ஓட்டை குத்தனவன் தமிழன். அடிப்படை பொருளாதார அறிவு, தேசப்பற்று இதெல்லாம் கிலோ என்ன விலைனு கேட்கிறவனை எல்லாம் நம்பி ஸ்டேட்மண்ட் கொடுக்காமல் இருப்பதே நல்லது.


Justin Jose
ஜூன் 16, 2024 11:08

தமிழ் நாட்டில் உங்களுக்கும் உங்களை சார்ந்த கட்சிகளுக்கும் தோல்வி நிரந்தரம்தாண்.... .


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 16, 2024 08:23

எந்த ஒரு கட்சிக்கும் வெற்றி நிரந்தரம் அல்ல.


Karthikeyan G
ஜூன் 16, 2024 07:40

பிஜேபி இன் வெற்றி மட்டும் நிரந்தரமானதா ?


Ariyanathan
ஜூன் 16, 2024 03:40

ராணுவம் தேர்தல் பணியில் ஈடுபட்டால் திமுக வெற்றி பெற்று இருக்காது. மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை எதிர்க்கட்சிகள் விழிப்புடன் இருந்து கள்ள ஓட்டை தவிர்த்தால் அவர்கள் வெற்றி பெறுவார்கள்


Karthikeyan G
ஜூன் 16, 2024 07:44

ராணுவத்தை வைத்து தில்லு முள்ளு செய்து மோடி வெற்றி பெற்றிருப்பர்


MADHAVAN
ஜூன் 15, 2024 17:50

கரூரில் திமுக கூட்டணி பணம் தரவில்லை, அதிமுக 300 பிஜேபி 200 தந்தார்கள், ஆனால் திமுக கூட்டணி காங்கிரஸ் 150000 ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி, எனவே வெற்றிபெற காசு முக்கியமில்லை,


மேலும் செய்திகள்





புதிய வீடியோ