உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிமாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைப்பா? மாநகராட்சிக்கு கண்டனம்

வெளிமாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைப்பா? மாநகராட்சிக்கு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கழிப்பறை கட்டும் பணி நடக்கிறது. இந்த வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அறையில் வட மாநில தொழிலாளர்கள் சமைத்து தங்கியுள்ள வீடியோ ஒன்று பரவியது. கழிப்பிடத்தில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் தனியார் வங்கி சி.எஸ்.ஆர்., நிதியுதவியில் பள்ளிகளில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. அவ்வகையில் பள்ளி வளாகத்தில் இந்த கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சிலர் அங்குள்ள ஒரு அறையில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி கமிஷனர், சம்பந்தப்பட்ட டெண்டர்தாரருக்கு எச்சரிக்கை விடுத்து, தொழிலாளர்கள் அங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. எந்தவிதமான மனித உரிமை மீறலும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே, வெளிநாநில துாய்மை பணியாளர்களை, கழிப்பறையில் தங்க வைப்பது தான் தி.மு.க.,வின் சமூக நீதியா என, பா.ம.க., தலைவர் அன்புமணியும், பணியாளர்களை மாநகராட்சி பள்ளி கழிப்பறையிலேயே தங்க வைத்தது முழுக்க மனிதநேயமற்ற செயல் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கல்யாணராமன் சு.
ஆக 03, 2024 14:46

முதல் படத்திலே அந்த தொழிலாளர்கள் கழிப்பறையில் உட்கார்ந்திருப்பது போல் தெரியவில்லையே .... கழிப்பறையை ஒட்டினாற்போல் உள்ள இடத்தில்தான் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது ....


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 03, 2024 10:50

வெளி மாநிலத்தில் பணியாற்றும் ஒரு தமிழ்நாட்டுக்காரரை இதுபோன்று கழிப்பறையில் அமர வைத்திருந்தால் இங்குள்ளவர்கள் எப்படி எல்லாம் பொங்கி இருப்பார்கள் என்று யாராவது நினைத்து பார்ப்பார்களா?


நியாயவான்
ஆக 03, 2024 07:24

நல்காத்தான் போய்க்கிட்டிருந்திச்சு. எவனோ வீடியோ எஉத்து கொளுத்திப்.படி வெவகாரமாயிருச்சு. அந்த காண்டிராக்டஐ நாகு நாள்.ஜழிப்பறையில் தங்க வெச்சு சமைச்சி சாப்புட வைப்பதே தகுந்த தண்டனை.


Svs Yaadum oore
ஆக 03, 2024 06:24

வெளிமாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைப்பாம் ....துாய்மை பணியாளர்களை, கழிப்பறையில் தங்க வைப்பது தான் தி.மு.க.,வின் சமூக நீதியா என கேள்வி .....அந்த தொழிலாளர்கள் எல்லாம் மேற்கு வங்க மேடம் ஆதார் கார்டு ரேஷன் கார்டு எடுத்து கொடுத்து அனுப்பிய பக்கத்து நாட்டவர் என்றால் ராஜ போகமாக இங்கு விடியல் இடம் கொடுத்து தங்க வைத்திருப்பார்கள் ....விடியலுக்கு எப்போதும் சமூக நீதி மத சார்பின்மை ரொம்ப முக்கியம் ....


Vijayakumar Srinivasan
ஆக 03, 2024 05:50

பணிகளை மேற்கொள்ள.நம்மவர்கள்கிடைக்கவில்லைபோலும்.இதில்பணிகள்மண்ணின்மைந்தர்களுக்கே.


Apposthalan samlin
ஆக 03, 2024 11:39

நாம ஊர்க்காரர்கள் படித்தவர்கள் சம்பளம் அதிகம் வட இந்தியா மக்கள் சாப்பாடு போட்டு 200 ருபாய் கொடுத்தால் போதும் நாள் முழுக்க வேலை பார்ப்பார்கள்.


Kasimani Baskaran
ஆக 03, 2024 05:45

என்ன எழவு சமூக நீதியோ. காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். தொழிலாளர்களை தங்கவைக்க ஒரு பழைய கன்டைனரை கூட கொண்டு வர முடியாதா?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை