உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்

தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்

ஈரோடு:தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட குரூப்-1 தேர்வில்,மாநில அளவில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே மாச்சாபாளையத்தை சேர்ந்த மாருதிபிரியா முதலிடம் பெற்றுள்ளார்.குமாரபாளையம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்தார். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் குருவாயூரப்பன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணி செய்கிறார். தற்போது குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசு பணிக்கான போட்டி தேர்வுகளை, நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். பல பயிற்சி மையங்களில் போட்டி தேர்வுக்காக பயிற்சி பெற்றேன். குரூப்-4ல் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தபோதிலும், குரூப்-1 தேர்வுக்காக தொடர்ந்து முயன்றேன். கடந்த, 2019 முதல் தேர்வு எழுதி, 3ம் முறையாக தேர்வில் வெற்றியை கண்டுள்ளேன். மிகுந்த மகிழ்ச்சியாக கருதுகிறேன். போட்டி தேர்வுகள் எழுதுபவர்கள், தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. தொடர்ந்து முயல வேண்டும்; எழுத வேண்டும். 'நான் வெற்றிக்கான அடையாளம் அல்ல; தோல்விக்கான அடையாளமாகவே கருதுகிறேன்'. என்னை பார்த்து போட்டி தேர்வை சந்திப்பவர்கள், தொடர்ந்து முயன்று வெற்றி பெற வேண்டும்.என் தந்தை ராமசாமி, பொதுப்பணித்துறை, மேட்டூர் அணை பிரிவில் ஏ.இ.,யாக இருந்து காலமாகி விட்டார். தாயார் காந்திமதி, குடும்ப தலைவி. எனது கணவர் பிரபாகரன், ஈரோட்டில் கெமிக்கல் கம்பெனி மார்க்கெட்டிங் ஊழியராக பணி செய்கிறார். எனக்கு இரட்டை குழந்தைகளாக ஸ்ருதி, ஸ்மிதி உள்ளனர். இவர்கள், 5ம் வகுப்பு படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி