உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரக்கோணத்தை பாதாளத்தில் தள்ளிவிடாதீர்கள்: ராமதாஸ்

அரக்கோணத்தை பாதாளத்தில் தள்ளிவிடாதீர்கள்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சோளிங்கர்: ''பணத்திற்காக, அரக்கோணம் தொகுதியை பாதாளத்தில் தள்ளி விடாதீர்கள்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.அரக்கோணம் லோக்சபா தொகுதி சோளிங்கரில், பா.ம.க., வேட்பாளர் கே.பாலுவை ஆதரித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கு, மக்கள் நலனை பற்றி சிந்திக்கக்கூடிய வேட்பாளர் பாலு கிடைத்துள்ளார். இவர், இந்திய அளவில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என, பொது நல வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றவர். தமிழகத்தில் 3,324 மதுக்கடைகளை மூடுவதற்கு வழி வகை செய்தவர். 2004 லோக்சபா தேர்தலில், அரக்கோணம் தொகுயில் இருந்து வெற்றி பெற்று, மத்திய இணை அமைச்சரான வேலு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். இப்போது அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பாலு, எம்.பி.,யாகவும், அமைச்சராகவும் வாய்ப்பு உள்ளது.உங்கள் ஓட்டு மது ஆலைகளை நடத்துபவர்களுக்கா அல்லது மதுக்கடைகளை மூடுவதற்காக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றவருக்கா என்பதை சிந்தித்து ஓட்டளியுங்கள். ஒரு நாள் உங்களுக்கு அளிக்கும் பணத்திற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு இந்த தொகுதியை பாதாளத்தில் தள்ளி விடாதீர்கள். பா.ம.க., வேட்பாளர் பாலுவுக்கு மாங்கனி சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

gopi
மார் 29, 2024 09:41

சேர்ந்துள்ள இடம் சரி இல்லை என்றாலும் மதுவை ஒழிக்க முயலும் ஒரு நல்ல விஷயத்துக்காக எனது வாக்கு பாலு அவருக்கே


Sampath Kumar
மார் 29, 2024 09:21

vithu nalla enna poviya


முருகன்
மார் 29, 2024 08:15

பணம் இவர்களுக்கு மட்டுமே சொந்தம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ